"கல்முனை - சாய்ந்தமருதிற்கு" எதிராக அக்கரைப்பற்றில் பிரதேசவாதம் கிளப்பும் அதாவுல்லா அணி.


அக்கரைப்பற்று நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைப் பிராந்தியக் காரியாலயம் அக்கரைப்பற்றில் இருந்து கொண்டு செல்லப்படுவதான ஒரு பிழையான கருதுகோளை உண்டாக்கும் ஊடக அறிக்கையொன்றினை அதாவுல்லா அணியின் முன்னணி செயற்பாட்டாளரும், அவரது முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரியுமான ஒரு சகோதரர் வெளியிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் எண்ணத்தில் இப்பதிவினை விரிவாக எழுதுகிறேன்.

அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயம் உருவாக்கப்படும் போது 5,000 இணைப்புக்களே இருந்தன. சாதாரணமாக ஒரு பிராந்தியக் காரியாலயம் உருவாக்கப்படுவதற்கு 20,000 இணைப்புக்கள் வேண்டும். அல்லது போதும். அப்படி இருக்கும் போதுதான் 5000 க்கு அக்கரைப்பற்றுக் காரியாலயம் உருவாக்கப்பட்டது.

இப்போது அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தில் தற்போது 70,000 இணைப்புக்கள் இருக்கின்றன. அவற்றில் 35,000 இணைப்புக்களைக் கொண்டு இன்னுமொரு பிராந்தியக் காரியாலயம் உருவாக்கப்படவுள்ளது. இதனை திரிபுபடுத்தி, அக்கரைப்பற்றுக் காரியாலயம் கொண்டு செல்லப்படுகிறது என்று அரசியல் நோக்கத்தில் அறிக்கைகளை விடப்படுகின்றன.

இப்படி, சாய்ந்தமருதில் உருவாக்கப்படும் பிராந்தியக் காரியாலயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அரசியல் நோக்கம் கொண்ட பிரதேசவாதம் பேசும் சகோதரர்கள் ஒரு கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். அதாவது, அக்கரைப்பற்றிற்கு அன்று 5,000 இணைப்புக்களுக்கு ஒரு பிராந்தியக் காரியாலயம் கொண்டு வரப்படும் போது அம்பாறையைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புக் காட்டியது நியாயம்தான் என்று கூற வருகிறீர்களா?அப்படி நியாயம் என்று ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இப்போது நீங்கள் எதிர்ப்பினைக் காட்ட முடியும். நீங்கள் நிருவாகத்தைக் காலடிக்குக் கொண்டு வருகிறோம் என்று சொன்னால் அது நியாயம்; இன்னொருவர் செய்தால் தப்பா? இரட்டை நிலைப்பாடு எதற்கு? பிரதேசவாதத்தைக் கையில் எடுத்து இன்னும் அக்கரைப்பற்றைப் பலிகொடுக்கும் அரசியலை ஏன் செய்ய முனைகிறீர்கள்?

அக்கரைப்பற்றில் இருக்கும் மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள மாவட்டக் காரியாலயம் அம்பாறைக்குக் கொண்டு செல்லப்படப் போகிறது; அங்கு அரச கட்டிடமும் தயாராக இருக்கிறது என்று தெரிந்து கொண்ட போது, உடனடியாக 05 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கி அக்காரியாலயத்திற்கு கட்டிடத்தை நாங்கள் கட்டிடத்தை நாங்கள் கட்டிக்கொண்டிருக்கும் போது; அம்பாரைக்குப் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில்; அக்கட்டிடத்தை தடுத்து நிறுத்திய நீங்கள்; இன்னுமொரு காரியாலயத்தில் இரட்டை வேடம் போடுவது ஏன்?

கரையோரப் பிரதேசத்தில் உருவாக்கப்படவுள்ள இன்னுமொரு பிராந்தியக் காரியாலயத்திற்கு கொழும்பிலிருந்தா இணைப்புக்களைப் பெறுவது? கரையோரத்தில் இருக்கும் இணைைப்புக்களைத்தானே பெற முடியும். அதில் என்ன தவறு இருக்கிறது? அற்ப அரசியலுக்கு ஊர்களுக்கிடையே ஏன் பகைமைகளை உருவாக்குகிறீர்கள்? அக்கரைப்பற்றை உங்கள் அரசியலுக்காக ஏன் மற்ற ஊர்களோடு மோத விடுகிறீர்கள்?

அக்கரைப்பற்றுக் பிராந்தியக் காரியாலயத்தின் அந்தஸ்த்தோ அல்லது அதற்கான வளங்களில் குறையோ ஏற்படாது - நமது முஸ்லிம் பிரதேசத்தில் இன்னுமொரு காரியாலயம் உருவாகும் பயன்மிக்க சந்தர்ப்பத்தை ஏன் குழப்புகிறீர்கள்? நீங்கள் பிரதேசவாதம் பேசி தோற்று - இன்று அக்கரைப்பற்றை எங்கு கொண்டு சென்று நிறுத்தியுள்ளீர்கள் என்பதை எப்போதுதான் உணருவீர்கள்?

எம்மைப் பொறுத்தவரை பிரதேசவாதம் அக்கரைப்பற்றை அடியோடு அழிக்கும் நஞ்சு என்பதால் - பிதேசவாதம் என்ன வடிவில் வந்தாலும் அதனை மூர்க்கத்தனமாக எதிர்த்து நிற்போம் இன்ஷா அல்லாஹ்.

ஏ.எல்.தவம்
அக்கறைப்பற்றான்


(இது தவத்தின் தனிப்பட்ட பதிவு. மாகாண சபை உறுப்பினர் தவத்தின் பதிவல்ல)
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment