மகிந்த ஜனாதிபதியாகவிருந்திருந்தால் போரை முடித்தது போல் ஆவா குழுவினரையும் அடக்கியிருப்பார்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்­தி­ருந்­தால் வடக்­கில் ஆவா குழு வந்­தி­ருக்­காது. போரை முடித்­தது­ போல் வடக்­கில் அனைத்து வித­மான பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுக்­கும் முற்­றுப் புள்ளி வைக்­கப்­பட்­டி­ருக்­கும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உத­ய­ கம்மன்­பில தெரி­வித்­துள்­ளார்.

'நாட்­டின் வர­லாற்­றில் மகிந்­த­வின் ஆட்­சி­யைப் போன்­ற­தோர் ஆட்­சியை எம்­மால் பார்க்க முடி­யாது. 30 வரு­டங்­க­ளாக இந்த நாட்டை அழித்­துக் கொண்­டி­ருந்த பயங்­க­ர­வா­தத்தை மூன்று வரு­டங்­க­ளில் இல்லாதொழித்து வர­லாற்­றுச் சாதனை படைத்­த­வர். இலங்­கைக்கு மட்­டு­மல்ல முழுத் தெற்­கா­சி­யா­வுக்­குமே அவர் பெருமை சேர்த்ததுடன் வழி காட்டியாகவும் திகழ்ந்­தார். போர் முடிந்த பின் சிறு வன்­மு­றைச் சம்­ப­வங்­கள்­கூட இந்த நாட்­டில் இடம்­பெ­ற­வில்லை.

அவ்­வ­ளவு தூரம் பயங்­க­ர­வா­தத்தை வேரோடு பிடுங்கி எறிந்­தார். தெற்­கில் பாதாள உலகக் குழு­ வி­ன­ரின் அட்­ட­கா­சம் அதி­க­ரித்­துள்ள அதே­நே­ரம் வடக்­கில் பயங்­க­ர­வா­தக் குழுக்­க­ ளின் அட்­ட­கா­சம் தலை­வி­ரித்­தா­டு­கின்­றது. ஆவா என்­றொரு குழு அங்கு செயற்­ப­டத் தொடங்­கி­யுள்­ளது. இவர்­களை இயக்­கு­ப­வர்­கள் யார் ? இவர்­க­ளின் நோக்­கம் என்­ன­வென்று தேடிப்­பார்க்க வேண்­டிய கடமை இந்த அர­சுக்கு உண்டு. உண் மை­யில் மகிந்த தொடர்ந்­தும் ஜனாதிபதியாக இருந்­தி­ருந்­தால் வடக்­கில் ஆவா குழு வந்­தி­ருக்­காது.

போரை முடித்­த­து­போல் வடக்­கில் அனைத்­து­வி­த­மான பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்­கும் முற்­றுப் புள்ளி வைக்­கப்­பட்­டி­ருக்­கும். நாடு அமை­தியை இழந்­து­விட்­டது. நாடு இப்­போது ஆபத்தை நோக்­கிச் செல்­கின்­றது – என்­றார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment