ஹ‌க்கீமின‌தும் குமாரி குரேயின‌தும் போட்டோக்க‌ளை எடிட் ப‌ண்ணியுள்ள‌தை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறேன்.

ஒரு ம‌ண‌ப்பெண்ணும் ம‌ணாள‌னும் உள்ள‌ புகைப்ப‌ட‌த்தின் த‌லைக‌ளை மாற்றி அதில் ர‌வூஃப் ஹ‌க்கீமின‌தும் குமாரி குரேயின‌தும் போட்டோக்க‌ளை எடிட் ப‌ண்ணியுள்ள‌தை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறோம். இது ஒரு ம‌னிதாபிமான‌ம‌ற்ற‌ செய‌ல் என்ப‌தில் உல‌மா க‌ட்சி உறுதியாக‌ உள்ள‌து.

ஹக்கீம் குமாரி உற‌வு உண்மையான‌து என்ப‌து குமாரியின் பொலிஸ் வாக்குமூல‌ம் சொல்கிற‌து. அத‌ற்காக‌ இவ்வாறான‌ போலி போட்டோக்க‌ளை வெளியிடுவ‌தை அனும‌திக்க‌ முடியாது.

அதே வேளை இத்த‌கைய‌ போட்டோவை வெளியிட‌ அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் இர‌ண்டு லட்ச‌ம் கொடுத்து தெஹிவ‌ள‌யில் ஸ்டூடியோ ஒன்றை ஏற்பாடு செய்திருப்ப‌தாக‌ ஹ‌க்கீம் அனுதாபிக‌ள் க‌தை க‌ட்டிவிட்டிருப்ப‌தும் க‌ண்டிக்க‌த்த‌க்க‌தாகும். இவ்வாறு போட்டோக்க‌ளை எடிட் செய்வ‌த‌ற்கு ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் அல்ல‌ ஆயிர‌க்க‌ண‌க்கில் கூட‌ செல‌வு செய்ய‌த்தேவையில்லை. சிறுவ‌ர்க‌ள் கூட‌ ஸ்மாட் போன்க‌ளில் இவ்வாறு செய்கிறார்க‌ள். 

இத‌ற்குப்போய் அமைச்ச‌ர் ரிசாத் ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் செல‌வு செய்கிறார் என்ப‌து அதீத‌ க‌ற்ப‌னையாகும். அமைச்ச‌ர் ரிசாத் ப‌ற்றி எம‌க்கு ந‌ன்கு தெரியும். அவ‌ர் இப்ப‌டியான‌ ஈன‌ச்செய‌லுக்கு உத‌புவ‌வ‌ர் அல்ல‌.


ஆக‌வே முஸ்லிம் ச‌மூக‌த்தில் இவ்வாறான‌ சிறுபிள்ளைத்த‌ன‌மா செய‌ல்க‌ள் நிறுத்த‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ கேட்டுக்கொள்கிறோம். நிச்ச‌ய‌மாக‌ இவ‌ற்றுக்கும் ம‌றுமையில் இறை த‌ண்ட‌னை உண்டு என்ப‌தை எச்ச‌ரிக்கிறோம்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment