வேலை வாய்ப்புகளின்றி 42,000 பட்டதாரிகள் இருக்கின்றனர்.

பட்டதாரிகள் 42,000 பேர் வேலை வாய்ப்புகளின்றி இருப்பதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. தொழில் வாய்ப்புகள் வழங்கப்படாத காரணத்தினால் அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அந்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னே ஞானாநந்த தேரர் குறிப்பிட்டார்.
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம். ரபீக்கிடம் வினவப்பட்டது. அரச சேவையில் பட்டதாரிகளுக்கு நிலவும் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் அறிக்கை கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அமைச்சுகளின் செயலாளர்களுக்கும், மாகாண பிரதம செயலாளர்களுக்கும் இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வெற்றிடங்கள் தொடர்பான அறிக்கை கிடைக்கப்பெற்றதும், பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment