அமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவிப்பு.

அமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பி.எம்.யூ.பஸ்நாயக்கவின் புதல்வியின் திருமண விருந்துபசாரத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது, தான் அமைச்சுப் பதவியை துறக்கப் போவதில்லை எனவும், அரசாங்கம் விரும்பிய தீர்மானத்தை எடுக்கும் வரையில் காத்திருக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்று போலவே இன்றும் தாம் சரியான விடயங்களை கூறுவதற்கு அஞ்சியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் தான் வெளியிட்ட கருத்துக்களுக்கு பௌத்த மாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவளித்து வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment