மஹிந்த ஆட்சிக்கால மோசடிகள் விசாரிக்கப்படாமல் இருப்பதற்கு நீதி அமைச்சரின் அழுத்தங்களே காரணம்!

மஹிந்த ஆட்சியின் மோசடிகள் இரண்டரை வருடங்களாக விசாரிக்கப்படாமல் இருப்பதற்கு நீதி அமைச்சரின் அழுத்தங்களே காரணம் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொம்பே கிரிந்திவெல பஸ்தரிப்பிட திறப்பு விழா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர்:திருடர்களுக்கு சாதகமாக செயற்பட்டு பதவியில் இருந்து அகற்றப்படவுள்ள நிலையில் தான் இனம்,மதம் குறித்து விஜயதாசவுக்கு நினைவு வந்திருக்கிறது. நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்தது. "அவன்கார்ட் "மோசடி,மிக்விமான மோசடி, இது பற்றி செய்தி வெளியிட்டதால் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவுக்கு நடந்த கதி, குறித்து மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.மத நல்லிணக்கம்,ஜனநாயகம், சுதந்திரத்தை ஏற்படுத்துதல் மற்றும் கடத்தல்களை நிறுத்துதல்,என்பவையும் நல்லாட்சி அரசால் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளாகும்.

தற்போதைய அரசிலுள்ள சில அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் வேதனை தருகின்றன.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறும் கருத்துக்களை விட இவை கவலையளிக்கின்றன. சில அமைச்சர்கள் அமைச்சு வரப்பிரசாதங்களை பயன்படுத்திக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர்.கடந்த ஆட்சியில் வாய்திறக்காதவர்கள் தற்பொழுது வீரர்களாக மாறியிருக்கிறார்கள்.

தாஜூதீன் கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் பொலிஸ் குழுவுக்கு அரச மாளிகையிலிருந்து 46 தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளன. இவற்றை விகாரமாகதேவி தான் வழங்கியிருக்கிறார். திருடர்களை ஏன் இன்னும் தண்டிக்கவில்லை என எல்லோரும் வினவுகின்றனர். நாட்டின் நீதி அமைச்சர் தொடர்பில் பிரச்சினை இருக்கிறது. இரண்டரை வருடங்கள் விசாரணைகள் முடங்கிக் கிடப்பதற்கு நீதி அமைச்சரின் அழுத்தமே காரணம். திருடர்களை பிடிக்குமாறு மக்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் கேட்கிறார்கள். சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் இதனை தான் கோருகிறார்கள். வழக்குகள் தாமதமாக நீதி அமைச்சர் தான் காரணம்.

விசேட நீதிமன்றம் அமைத்து வழக்குகளை விசாரணை செய்வதற்கு யாப்பு திருத்தம் தேவை என நீதி அமைச்சர் கூறுகிறார். வித்யா கொலை,பண்டாரநாயக்க கொலை,பாரத லக்‌ஷ்மன் கொலை என்பன தொடர்பில் தினமும் வழக்கு விசாரணை நடத்தப்பட்டன.கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்தும் தினமும் விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக நான் அமைச்சரவையில் வினவினேன். 3 விசேட நீதிமன்றங்களை உருவாக்கி விசாரணைகளை ஆரம்பித்தால், மொட்டு மலரவே மலராது. அது நிரந்தரமாக மொட்டாகவே இருந்து விடும். திருடர்களுக்கு சார்பான அமைச்சர்களுக்கு ஜ.தே.க செயற்குழுவில் ஆதரவாக எவரும் பேசவில்லை. என்று தெரிவித்தார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment