விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள்.

விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம், ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் என சிறுவா் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நில மெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவா் இதனை தெரிவித்துள்ளார். “யுத்தத்தை எப்படி இவா்கள் முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். சிறுவா்கள் முதியோர்களை கொன்றுதான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனா். இப்படியானவா்கள் மீண்டும் ஒரு அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு சர்வதேசம் அனுமதிக்க கூடாது. எனவே எங்களுடைய நல்லாட்சி அரசாங்கம் நீண்ட காலத்திற்கு செல்ல வேண்டும்.

எங்களுடைய சொந்த கால்களில் வாழந்த எங்களைக் கடந்த அரசாங்கம் கையேந்தி வாழும் நிலைக்கு தள்ளியுள்ளது. இனிவரும் காலங்களில் இப்படியான அரசாங்கத்திலே யார் யார் அங்கம் வகித்தார்களோ, யார் யார் காட்டிக்கொடுத்தார்களோ,யார் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உறுதுணையாக நின்றார்களோ அவர்களை இனம் காணுங்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள். நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்கள. படுகொலை செய்திருக்கின்றீர்கள் அவா்களை அங்கவீனர்கள் ஆக்கியிருக்கின்றீர்கள், எங்களுடைய இளம் வயது பெண்களை விதவைகள் ஆக்கியிருக்கின்றீர்கள். எனவே இவ்வாறானவா்களுக்கு நாங்கள் எதிர்வரும் காலங்களில் இடமளிக்க கூடாது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியை கொண்டு செல்லப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாத சில தீய சக்திகள் வாள் வெட்டு, கிறிஸ்பூதம், பள்ளிகளை அடித்தல், ஆலயங்களில் சிலைகளை கொண்டு செல்லுதல் இ்பபடியான எத்தனையோ அட்டூழியங்களை அசெய்து வருகின்றார்கள்.

எனவே இதிலிருந்து நாங்க்ள விடுதலைப்பெற வேண்டும் இதற்காகதான் நாங்கள் இந்த நல்லாட்சி அரசை ஏற்படுத்தியிருக்கின்றோம். 2015 இற்கு பின்னர் எத்தனையோ காணிகளை இராணுவத்தினடம் இருந்து மீட்டு மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம். எனவே இப்படியான நடவடிக்கைகளுக்கு மக்கள் உறுதியான அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டும், உறுதியானவா்களை தெரிவு செய்ய வேண்டும்.

தற்போது வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் செல் தாக்குதல் பங்கா் வாழ்க்கை, காணாமல் போதல்,வெள்ளைவான் கடத்தல் இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இருந்த போதும் கல்வி முன்னேற்றத்தில் இருந்தது. ஆனால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னா் கல்வி நிலைமை மிக மோசமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment