அரசமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவா எதிர்ப்பா..?? இன்று முடிவு.

அபு அலா –

அரசமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து இன்று (07) வியாழக்கிழமை கிழக்கு மாகாண சபையில் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் அஹமட் நஸீர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இத்தீர்மாணத்தை நாடளாவிய ரீதியிலுள்ள எல்லா மாகாணங்களும் எதிர்பார்த்த வன்னம் உள்ளதாகவும் இதேபோல் மாகாணத்திலுள்ள அனைத்து  மக்களும் எதிர்பார்த்த வன்னம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 28 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் நடைபெற்ற மாகாண சபை அமர்வின்போது அரசமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த விவாதத்தின்போது சபையில் ஏற்பட்ட அமளியால் சபையின் நடவடிக்கைகளை தவிசாளர் சந்திரதாச கலபெத்தி அன்றைய தினம் மதிய உணவுக்குப் பின்னர் வரை ஒத்தி வைத்தார்.

மதிய உணவுக்குப் பின்னர் 2.30 மணியளவில் சபை கூடியபோது சபையில் போதியளவு கோரம் இல்லாமையினால் சபையின் நடவடிக்கைகளை எதிர்வரும் (07) வியாழக்கிழமை வரை தவிசாளர் சந்திரதாச கலபெத்தியினால் ஒத்தி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலைமையில் இன்று (07) கூடவுள்ள மாகாண சபை அமர்வில் குறித்த அரசமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா? இல்லையா? என்ற இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் அஹமட் நஸீர் மேலும் கூறினார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment