மஹிந்தவின் வங்கிக் கணக்கில் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபா உள்ளதாம்.

கடந்த ஆட்சியில் மஹிந்தவும் மஹிந்தவின் குடும்பத்தினரும் அவரது சகாக்களும் கோடிக்கணக்கான ரூபா பணத்தைக் கொள்ளையடித்தனர் என்றும் அந்தப் பணம் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் கறுப்புப் பணமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்றும்  அரசு  குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்தப் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.இவ்வாறு  வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் தொடர்பில் 36 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 86 கோப்புகள் மீதான  விசாரணைகளில் 40 கோப்புகள் மீதான விசாரணைகள் முடிவுற்று அதன் பெறுபேறுகள் இலங்கை அரசுக்கு வரத் தொடங்கியுள்ளன என்று அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் துபாய் வங்கியில் மஹிந்தவினதும் அவரது மகன் நாமலினதும் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபா பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாம்.

மஹிந்தவின் கணக்கில் இருக்கும் பணம் எவ்வளவு தெரியுமா? இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாவாம்.கேட்கும்போது தலையே சுற்றுகிறது.இது உண்மை என்றால் மஹிந்த சர்வதேச அளவில் 49ஆவது பணக்காரராம்.  

அப்போ இன்னும் சிறிது காலம் ஆட்சியில் இருந்திருந்தால் பிள்கேட்ஸை முந்தி இருப்பார்போல.

[எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்] 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment