அகில இலங்கை சமாதான நீதிவானாக நடராஜா சத்தியசீலன் சத்தியப்பிரமாணம்.

அகில இலங்கை சமாதான நீதிவானாக பிரபல தொழிலதிபர் தேசகீர்த்தி, தேசபன்து, லங்காபுத்ர நடராஜா சத்தியசீலன் கொழும்பு மாவட்ட நீதிமன்ற பிரதி நீதிவான் டி.எம்.டி.சீ. பண்டார முன்னிலையில் 20.09.2017 அன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 

கொழும்பு -15, முகத்துவாரம், அலுத்மாவத்தையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், இரத்மலானை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அத்துடன், லயன்ஸ் கழகத்தின் கொழும்புக் கிளையின் வாழ்நாள் உறுப்பினரும், மட்டக்குளி ‘பீச் பார்க்’ அமைப்பின் அபிவிருத்திக் குழு உறுப்பினரும் ஆவார். 

இவர்; முகத்துவாரத்தைச் சேர்ந்த நடராஜா மற்றும் அன்னலட்சுமி தம்பதிகளின் மகனும் ஆவார். 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment