அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

சமூக வலுவூட்டல், நலன்புரி, நலநோன்புகை, மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் கீழுள்ள தேசிய உளவளத்துணை செயலகமும், அம்பாரை மாவட்ட செயலகமும்  இணைந்து அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு நடாத்திய 'உளவளத்துணையும், ஊடகச் செயலமர்வும்' எனும் தலைப்பிலான ஒரு நாள் செயலமர்வு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் மாவட்ட உளவளத்துணை இணைப்பாளர் ஏ.ஏ.தீன் முஹம்மது, உளவளத்துணை உதவியாளர் ஜறூன் சரீப், பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் எஸ்.ஆப்தீன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அம்பாரை மாவட்டத்திலுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு, பயன்பெற்றனர்.

பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'ஊடகவியலாளர்களுக்கு உளவளத்துணையின் பங்களிப்பும், உளவளத்துணைக்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பும் ஒன்றுக்கொண்று இன்றியமையாததாகக் காணப்படுகிறது. எனவே, ஊடகவியலாளர்களும், உளவளத்துணையாளர்களும் புரிந்துணர்வுடன் செயற்படவேண்டியது காலத்தின் தேவையாகும்' எனத் தெரிவித்தார்.Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment