உலகின் மிக அதிகமான எடை கொண்ட எகிப்து பெண் அபுதாபியில் மரணம்.


எகிப்து நாட்டை சேர்ந்த எம்மா என்ற 37 வயது பெண் சுமார் 500 கிலோ உடல் எடையுடன் உலகின் மிகவும் அதிகமான எடை கொண்ட பெண்ணாக ஊடகங்களின் கவனத்தை கவர்ந்தார்.

உடல் எடை குறைப்புக்காக இந்தியாவின் மும்பை நகரில் அவருக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதையடுத்து, 323 கிலோவாக எடை குறைந்த எம்மா, மேல்சிகிச்சைக்காக அபுதாபியில் உள்ள புர்ஜீல் ஆஸ்பத்திரியில் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 20 சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் கடந்த ஐந்துமாத காலமாக அங்கு சிகிச்சை பெற்றுவந்த எம்மா, சிறுநீரகக் கோளாறால் இன்று மரணம் அடைந்ததாக புர்ஜீல் ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்துள்ளது.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment