வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்து புதிய பைக் வாங்கி அதனை விற்கும் போது நஷ்டப்பட வேண்டாம்.

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.

சுற்றி வளைத்து உங்கள் நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக விடயத்திற்கே வருகின்றேன்.

சவுதி அரேபியா, கட்டார், டுபாய் போன்ற நாடுகளில் இருந்து ஊருக்கு வெக்கேசன் செல்லும் சகோதரர்களில் அநேகம் பேர் செய்யும் ஒரு தவறாக நான் பார்ப்பது புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி வெக்கேசன் முடிந்தவுடன் அந்த பைக்கை மிகவும் நஷ்டத்தில் விற்பதாகும்.

நண்பர்களே...!! வெளிநாடுகளில் இருந்து நீங்கள் 2 மாதம் அல்லது 4 மாதம் என ஊருக்கு வெக்கேசன் செல்லும் போது புதிய பைக்கை வாங்காமல் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட பைக் ஒன்றை வாங்கி உங்கள் வெக்கேசன் காலப்பகுதியில் ஓடிவிட்டு மீண்டும் வெளிநாடு போகும் நேரத்தில் அதனை விற்கும் போது கண்டிப்பாக நீங்கள் பெரிதாக ஒன்றும் நஷ்டப்படமாட்டீர்கள்.

அவ்வாறில்லாமல் நான் புதிய பைக்தான் வாங்கி ஓடுவேன் என்று அடம்பிடித்து நீங்கள் ஒரு பைக்கை வாங்கி உங்கள் வெக்கேசன் காலம் முடிந்து உங்கள் கையைக் கடிக்கும் போது அதனை நீங்கள் விற்க முற்படும் நிலைவரும் போது உங்கள் பைக்கை நீங்கள் மிகவும் அநியாயவிலையிலேயே விற்க வேண்டிவரும் என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் புதிய பைக் வாங்கி அதனை விற்கும் எண்ணம் இல்லாது வீட்டில் வைத்து விட்டுச் செல்வதாக இருந்தால் அல்லது வெளிநாட்டு வாழ்க்கையை முடித்து விட்டு ஊரிலே இருக்கும் நிலையில் இருந்தால் நீங்கள் தாரளமாக புதிய பைக்கை வாங்கி ஆசை தீர ஓடுங்கள்.

நான் விடுமுறையில் சென்ற நேரம் புதிய பல்சர் பைக் ஒன்றை வாங்கினேன் எனக்கு பைக்கின் ஆவணங்கள் எல்லாவற்றுக்கும் சேர்த்து மொத்தம் 3 இலட்சத்து 40 ஆயிரம் வரை முடிந்து விட்டது இத்தனைக்கும் அந்த பைக்கை நான் ஓட்டியது வெறும் 4 மாதங்களாகத்தான் மொத்தமாக ஒரு 1800 கிலோமீட்டர் வரைதான் ஓடியிருப்பேன் பிறகு வெக்கேசன் முடிந்து சவுதிக்கு வரும் நேரம் அதனை நான் விற்கும் போது வெறும் 2 இலட்சத்து 70 ஆயிரத்துக்குத்தான் அதனை விற்றேன் ஆக எனக்கு எவ்வளவு நஷ்டம் என்று பாருங்கள்.

இதே நீங்கள் புதிய பைக்கை வாங்காமல் யூஸ் பண்ணிய பைக் ஒன்றை வாங்கி 2 இலட்சத்து 50 க்கு வாங்குகின்றீர்கள் என்றால் அதனை வெக்கேசன் காலம் முடிந்த பிறகு வாங்கிய அதே கடைக்காரரிடம் அல்லது வேறு கடையில் அதனை சில குறிப்பிட்ட தொகைப் பணத்தை குறைத்து விற்பனை செய்யலாம் நீங்கள் யூஸ் பண்ணிய பைக் வாங்கும் போது அதனை வாங்கும் கடைக்காரரிடம் கூறுங்கள் “ நான் எனது வெக்கேசன் முடிந்த பிறகு பைக்கை உங்களிடமே விற்பேன்” என்று அது இன்னும் நல்ல நியாய விலையில் விற்க நட்பை ஏற்படுத்தும்.

நன்றி.

(நல்ல பாடம் கற்ற அனுபவப் பதிவு)
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment