றோஹிங்யாவுக்கான நிவாரண சேகரிப்பாளர்கள் உறுதி செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமுக்கு சகோதரனாவான். ஒரு முஸ்லிம் பாதிக்கப்படும் போது, அவனுக்கு உதவுவது இன்னுமொரு முஸ்லிமுக்கு கடமையாகும். அந்த வகையில் முஸ்லிமாக உள்ள ஒரே காரணத்துக்காக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அவர்களுக்கு உதவுவதற்காக சிலர் களமிறங்கியுள்ளனர். அது சிறந்த பாராட்டுக்குரிய விடயமாக இருப்பினும், இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் வயிறு வளர்க்க முனைவதற்கும் வாய்ப்புள்ளது. அது மாத்திரமன்றி உயரிய தொடர்புகளின்றி மேற்கொள்ளப்படும் நிவாரண சேகரிப்புக்கள் உரிய வகையில் உரிய நபர்களை சென்றடையுமா என்பதெல்லாம் கேள்விக்குரிய விடயங்கள். இவர்கள் சிறந்த நோக்கத்தில் செய்வதை, அங்குள்ளவர்கள் தவாறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. இதனை உறுதி செய்ய உயரிய மட்ட தொடர்புகள் அவசியம்.

மியன்மார் விடயத்தில் உணர்ச்சிகள் ததும்பி வழிவதால், நிவாரண சேகரிப்புக்கள் மிக அதிகமாக கிடைக்கப்பெறும். அதனை ஒரு சிறிய அமைப்பினால் சரிவர செய்ய முடியுமா என்பதெல்லாம் கேள்விக்குரிய விடயங்களாகும். இன்னும் சொல்லப் போனால் இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றினைந்து ஒரு பெரும் தொகையை திரட்டி வழங்கும் போது, பலருக்கும் நிதியை வழங்க போதுமாக இருக்கும். தனித்தனியே சிறு சிறு அமைப்புக்கள் ஒன்றினைந்து வழங்கும் போது, ஒரு பகுதியினரே பல தடவைகள் நிதியை பெறவும் வாய்ப்புள்ளது.

இப்படி பல காரணங்களை கருத்தில் கொண்டு, இதனை இலங்கை மக்களின் பெரும்பான்மை ஆதரவை கொண்ட அரசியல் கட்சி அல்லது இஸ்லாமிய அமைப்புக்கள் மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும். எனது இக் கருத்தினூடாக குறித்த நிவாரணம் சேகரிப்பாளர்களை நான் குறை கூறுவதாக தவாறாக நினைக்க வேண்டாம்.

எவர்கள் வரிந்து கட்டி நிற்க வேண்டுமோ, அவர்கள் படுத்துறங்கி கொண்டிருக்கின்றனர். செய்பவர்களையும் செய்யாமலாக்குகின்றோமா என்ற சிந்தனையும் எனக்கு எழாமலில்லை.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment