என்.எம் ரவல்ஸ் முஹம்மத் ஹாஜியாா் மகன் ஹூமைட் இன்று காலமானாா்.

புற்றுநோயால் பாதிக்கபட்ட நிலையில், வருடத்துக்கு மூன்று தடவை 'பெட் ஸ்கேனர்' மூலம் பரிசோதனை செய்து தற்காலிகமாக குணப்படுத்த வேண்டும். இலங்கை அரச வைத்தியசாலைகளில் இந்த இயந்திரம் இல்லாதால் நவலோக அல்லது ஆசிரியில் இதனை செய்ய வேண்டும்.

ஒரு தடவைக்கு ஒன்னே முக்கால் இலட்சம் வரை செலவாகும். என்னிடம் ஓரளவு வசதி இருப்பதால் இதனை தனியாரிடம் செய்து கொள்கிறேன்.

ஆனால் வசதியற்றவர்களின் நிலை? அவர்களின் குழந்தைகள் தரையில் படுத்து நோயால் அவதிப்படும்போது நாம் மட்டும் இந்த சலுகைகளை அனுபவிப்பதை ஏற்க முடியாது.


இந்த இயந்திரத்தை கொள்வனவு செய்ய நாம் அத்திவாரம் போடுவோம். என தன் தந்தை மற்றும் கதீஜா பவுண்டேசன் மூலம் தன் போராட்டத்தை ஆரம்பித்து பலதரப்பட்ட இயக்கங்கள், ஊடகங்கள், பிரபல நபர்களுடன் இணைந்து இலங்கை மக்களிடம் இருந்து பெட் ஸ்கேனர் இயந்திரத்துக்கான பணத்தை ( 20 கோடி ரூபாய்) சேர்த்து அதற்கான டெண்டர் அழைப்பு விடுக்கபட்டு ஜேர்மன் நிறுவனத்தில் அதனை கொள்வனவும் செய்த நிலையில் இன்று முகமத் ஹுமைத் வபாத்தாகி உள்ளார். 

இவரது ஜனாசா இன்று(12) 04.30 மணிக்கு தெஹிவளை ஜூம்ஆப் பள்ளி வாசலில் நல்லடக்கம் செய்யப்படும். ஜனாசா 46 c களுபோவில வைத்தியசாலை வீதி தெஹிவளையில் வைக்கப்பட்டுள்ளது
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment