மிகவும் மாசுபட்ட கடற்கரைகளின் பட்டியலில் இலங்கை 5வது இடத்தில்.

மிகவும் மாசுபட்ட கடற்கரையில் 5ஆவது இடத்தில் இலங்கை இருக்கின்றது என்று கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் முகாமையாளர் பேராசிரியர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார். தேசிய கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம் மற்றும் கடற்கரை தூய்மை தினத்தின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆசிய கடல் வலயத்தில் மத்திய நிலையமாக இருப்பது இலங்கைக்கு முக்கியமானதாகும். புள்ளிவிவர தகவலின் பிரகாரம் எங்கள் நாட்டுக்கு கிடைத்திருக்கின்ற இந்த நிலை, அவ்வளவு நல்லதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆறுகள் மற்றும் நீரோடைகளில் நாங்கள் வருடாந்தம் 1.59 மெற்றிக்தொன் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீனை வீசுகின்றோம். அதுதான் கடற்கரை மாசடைவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. 1975ஆம் ஆண்டை விடவும், இலங்கையில் பிளாஸ்டிக் பயன்பாடு, தற்போது, நூற்றுக்கு 625 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிளாஸ்டிக் பொலிதீன் பாவனை தேவையற்றமுறையில் முன்னெடுக்கப்பட்டமை மற்றும் பயன்படுத்தப்பட்டமை, முறையற்ற ரீதியில் அகற்றியமை உள்ளிட்ட காரணங்களினால் சுற்றுசூழலுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடற்கரையில் இருக்கின்ற க​ழிவுகளில் 10 சதவீதமானவை பிரதேசத்தில் இருந்தே அகற்றப்படுகின்றது. ஏனைய 90 சதவீதமானவை, நாட்டின் உள்பாகங்களில் இருந்து, கங்கைகள், நீரோடைகள் மற்றும் ஆறுகளிலிருந்தும் கடலுக்குள் அடித்து வரப்படுகின்றன. தாய்லாந்து, இந்தியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் கடல்களில் ஏற்படுகின்ற நீரோட்டங்கள் மூலமாக இவ்வாறான கழிவுகள் தொலைதூரத்திலிருந்து, இலங்கை கடற்கரைகளுக்கு இழுத்து வரப்படுகின்றன.

பல்வேறான நிறுவனங்கள், கழிவுகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளாது, அவற்றை க​டலுக்குள் கலக்கச் செய்துவிடுகின்றன. ஆகையால், பிளாஸ்டிக் கழிவுகள், பொலித்தீன் உள்ளிட்ட வகைகளை தொடர்பில், நிறுவனங்களுக்கு தெளிவுப்படுத்த உள்ளோம். பிளாஸ்டிக் கதிரைகள், பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும், பாரிய அச்சுறுத்தலானது. அவை தொடர்பில் சமூகத்தில் நல்ல கருத்து இல்லை. சுற்றாடல் பாதுகாப்பதற்கான அறிவு, மனப்பான்மை மற்றும் திறமை ஆகியன மேம்படுத்தப்படவேண்டும். அப்போதுதான், கடல்வள சுற்றுச்சூழல் மற்றும் கரையோரங்களை பாதுகாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment