ஜனாதிபதி மைத்திரிபாலவின் சகோதரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பு.

பொலனறுவையில் விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இரண்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேன, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலனறுவை- ஹிங்குராகொட வீதியில் எதுமல்பிட்டிய என்ற இடத்தில் நேற்று பிற்பகல் 1.10 மணியளவில், லால் சிறிசேன ஓட்டிச் சென்ற லான்ட் குரூசர் வாகனம், உந்துருளி ஒன்றை மோதித் தள்ளியது.

இந்த விபத்தில் உந்துருளியில் பயணம் செய்த சகோதரர்களான இருவர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய, லால் சிறிசேன, அந்த இடத்தில் நிற்காமல் தப்பிச் சென்று, சில மணிநேரம் கழித்து, காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, அவரை பொலனறுவை பதில் நீதிவான் முன் நிறுத்திய போது, அவரை செப்ரெம்பர் 11ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான லால் சிறிசேன, பொலனறுவையில் மிகவும் பிரபலமான வர்த்தகராவார்.இவர், 140 கி.மீ வேகத்தில் செலுத்திச் சென்ற வாகனமே விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment