பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாத அனைத்து காணிகளையும் பகிர்ந்தளிக்க முடிவு.


தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைய, பயிரிடப்படாத அனைத்து தனியார் காணிகளையும் பயிர்ச் செய்கையை மேற்கொள்பவர்களுக்காக பகிர்ந்தளிக்கும் வகையிலான, வர்த்தமானியை வௌியிடவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

வறட்சியால் சேதமடைந்த விவசாய நிலங்களை புனரமைப்புச் செய்து, உணவு உற்பத்தியை மேம்படுத்த அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள, வேலைத் திட்டமொன்றின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

திவுலாகலை புதிய பிரதேசசபை அலுவலகத்தை மக்கள் வசம் கையளிக்கும் நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

மேலும், பயிர்ச் செய்கை வேலைத் திட்டத்திற்காக அனைத்து அரச காணிகளையும் ஒன்றிணைக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மக்களை வறுமையில் இருந்து விடுவித்து தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி செழிப்பான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment