சம்மாந்துறையில் GCE (O/L) மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் உளவியல் கருத்தரங்கு.

GCE (O/L) -2017 பின்னிலை மாணவர்களுக்கான விஷேட வகுப்புக்களையும் ஊக்குவிப்பு கருத்தரங்குகளையும் கொண்ட கற்கை நெறித்திட்டம் - தாருஸ்ஸலாம் வித்யாலயம்.

கடந்த கால GCE (O/L) பரீட்சை முடிவுகளில் நமது சம்மாந்துறை மாணவர்களின் சித்தியடைவு வீதம் 60% க்கும் குறைவாகவே காணப்படுகின்றது விசேடமாக கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர்களே அதிகமாக உள்ளனர். இதனை நிவர்த்தி செய்வதற்காக நமதூர் பாடசாலைகளில் GCE (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் சித்தியடைவு வீதத்தினை மேலும் அதிகரிக்க முடியும். அந்த வகையில் விஷேட தொடேர்சியான வகுப்புக்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் அல்ஹம்துலில்லாஹ் கடந்த 7/09/2017ம் திகதி பெற்றோரிற்கும் மாணவர்களுக்கும் Rashad (Counselor) இனால் உளவியல் கருத்தரங்குடன் ஆரப்பித்து வைக்கப்பட்டது. படத்திலே பெற்றோர்களுக்கு இடம்பெற்ற விஷேட கருத்தரங்கினை காணலாம்.

இதற்கு Sammanthurai Welfare & Development Council - Education Sector இனால் அனுசரணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்.

07 6 7 866568
07 7 7 866 568

நன்றி.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment