சம்மாந்துறையில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் வைபவம்.

அம்பாறை மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைவாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட 46 கிராமங்களைச் சேர்ந்த 2984 குடும்பங்களுக்கு ரூபா 2500 பெறுமதியான உலர் உணவுப் பொதியிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு (16) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முகம்மட் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment