சம்மாந்துறையில் இடம்பெற்ற மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டிகள்.

தகவல் - மருதூர் ஹசன்.

சம்மாந்துறை மனித நேய நற்பணிப் பேரவையினால் ஹஜ் பெருநாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் பல இடம் பெற்றது. 

மரதன் ஓட்டப் போட்டி, துவிக் சக்கர ஓட்டப் போட்டி மற்றும் உதைப்பந்தாட்டப் போட்டி என பல போட்டிகள் இடம் பெற்றது. 

போட்டிகளின் ஒரு அங்கமான சைக்கிள் ஓட்டப் போட்டி சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் 05-09-2017 அன்று கோலாகலமாகஆரம்பமாகின, இப் போட்டியினை கண்டுகளிக்க பெருந்திரளான சம்மாந்துறை மக்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்து போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினர்.


நடைபெற்ற சைக்கில் ஓட்ட போட்டியில் சம்மாந்துறையை சேர்ந்த A .H. பசில் முதலாம் இடத்தை தட்டிக் கொண்டார். வெற்றியை தனதாக்கிக் கொண்ட பசில் கருத்து தெரிவிக்கும் போது அவரது நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியதாக குறிப்பிட்டு விளையாட்டு ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.இவ் விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த மோட்டார் போக்குவரத்து பொலிஸார்  கருத்து தெரிவிக்கும் போது  50-60Kmp வேகத்தில் பொலிஸ் வரும் போது பசில் என்பவர் மிகவும் வேகமாக களைப்பின்றி பின் தொடர்வதை அவதானித்து ஆச்சரியப்பட்டதாக குறிப்பிட்டார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment