சம்மாந்துறையை அபிவிருத்தி செய்வது தார்மீக கடமையாகும்.

(எம்.எம்.ஜபீர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தாய் ஊராகவும், மறைந்த பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் பிறந்த மண்ணாகவும் மதிக்கப்படும் சம்மாந்துறைக்கான அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் அனைத்திலும்  மாவட்டத்தின் அபிவிருத்தியில் சம்மாந்துறைக்கு சேரவேண்டிய அனைத்து பங்கினையும்  சமனாக வழங்குவது எனது தார்மீக கடமையாகும் என  நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கீழுள்ள உடங்க ஆற்றிற்கு குறுக்காகவுள்ள முஸ்தாக் அலி இறக்கத்திற்கான பாலம் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் 04 கோடி ரூபாய் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டவுள்ளது. இப்பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த பிரதேச மக்களின் நீண்டகால அத்தியவசியமான தேவையை நிறைவேற்றுவதற்கு கிழக்கு மாகாண சபையினூடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தனது அமைச்சின் ஊடாக இந்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தற்போது இவ்வாறான பல இடங்களுக்கு பாலங்கள் அமைக்கின்ற வேலைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஒதுக்கீட்டில் இவ்வாறான பாலங்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்காக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில்  மேற்கொள்ளும் பொருட்டு அமைச்சரவை பத்திரத்தை கடந்த வாரம் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளனர். அமைச்சரவை பத்திரத்தினை கண்ட உடனே அமைச்சரிடம் மீண்டும் அதிகமான பணம் பாலங்களை நிர்மாணிப்பதற்காக கிடைக்கவுள்ளது ஆகையால் மேலதிகமான பாலங்கள் எமது பிரதேசத்திற்கும் பெற்றுத்தர வேண்டும் என கோரியுள்ளேன். ஆகையால் சம்மாந்துறை பிரதேசத்தில் இருக்கின்ற விவசாய அமைப்புகளுடன் பேசி சம்மாந்துறை பிரதேச தேவையான பாலங்களுக்கான கோரிக்கைகளை முன்கூட்டியே தந்தால் அவற்றை பெற்றுதவருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவேன்.

தேசிய திட்டமிடல் திணைக்களம் ஊடாக நாங்கள் கல்முனை சம்மாந்துறை நகர பாரிய அபிவிருத்தி திட்டத்தினை தயாரிப்பதற்காக கடந்த வரவு செலவு திட்டத்தில் 250 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன அதில் பாரிய அபிவிருத்தி திட்டத்தினை தயாரிப்பதற்காக நாங்கள் எதிர்பாத்ததை விடவும் குறைவான செலவினம் போனதால் மீதமான 100 மில்லியன் நிதியை நாங்கள் சம்மாந்துறையிலே அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்திருந்தோம். அதற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளன. கிட்டத்தட்ட 100 மில்லியன் பெறுமதியில் முக்கியமான பாதை அபிவிருத்தி உள்ளிட்ட ஏனைய அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை விரைவாக செய்ய கேள்வி பத்திரம் கோர வேண்டியுள்ளது. இவ்வேலைத் திட்டங்கள் இந்த வருடத்துக்குள் அபிவிருத்தி செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக  அந்த விடயத்தை அரசாங்க அதிபர் ஊடாக செயற்படுத்த ஆலோசித்துள்ளோம் 
பிரதான பாதையான ஹிஜ்ரா சந்திதியிருந்து குறுக்கா செல்லும் பாதைகள் விஸ்தரிப்பு, மின்விளக்கு பெருத்துதல் போன்றவற்றிற்கு பாரிய மதீப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன அதற்கான நிதி ஒதுக்கீடுகள் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் இவ்வருடம் செய்யலாம் என்று இருக்கின்றோம். இவ்வருடத்திற்குள் அபிவிருத்தி செய்து முடிக்காது விட்டால் உதுக்கீடுகள் திரும்பி போய்விடும் என்ற ஆபத்து இருக்கின்ற காரணத்தினால் அதனை செய்யாமல் ஏனைய வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.
சம்மாந்துறை வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்திய போது ஏ தரத்திற்கு தரம் உயர்த்திவதற்கு உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுடனான விமர்சனம் பரவலாக பேசப்படும் விடயமாக கேள்விப்படுகின்றேன். உண்மையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவிடம் இதுவிடயமாக பேசியுள்ளேன். அவர் சம்மாந்துறை வைத்தியசாலையை ஏ தரத்திற்கு தரம் உயர்த்துவதற்கு உத்தரவாதம் அளித்துள்ளார். இதற்கமைய வைத்தியசாலைக்கு 2 ஆயிரம் மில்லியனிற்கு மேற்பட்ட வெளிநாட்டு கடன் உதவி திட்டத்தில் பாரிய கட்டிட தொகுதியை பெற்று தருவதற்கான இந்த முயற்சியிலும் நாங்கள் தீவீரமாக ஈடுபட்டு வருகின்றோம். அந்த நடவடிக்கையை எங்களுடைய ஆட்சி காலத்தில் நிறைவேற்றித் தருவன் என திட்ட வட்டமாக கூறிவைக்க விரும்புகின்றேன். குறிப்பாக பிரதி சுகாதார அமைச்சர் தேசிய மட்டத்தில் நிந்தவூரிலும் மாகாண மட்டத்தில் அட்டாளைச்சேனையிலும் இருக்கின்ற காரணத்தினால் அந்த ஊர்களில் காட்டப்படுன்ற தீவிரம் சம்மாந்துறையில் காட்டப்படவில்லை என்ற மாதிரியான விமர்சனங்கள் வேண்டும் என்று கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. 

சம்மாந்துறை வைத்தியசாலை அபிவிருத்தி விடயத்தில் இவ்வாறான தவறுகளும் நடந்து விடாமல் நிட்சயமாக ஸ்தாபகத் தலைவரின் தாயுராகவும் பிறந்த ஊராகவும் காணப்படும் சம்மாந்துறை பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு தலைமைப் பதவியை வகிக்கும் எனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment