தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் தொழில்நுட்ப பயிற்சி நெறிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்.

(அஷ்ரப் ஏ சமத்)

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின்  கைத்தொழில் தொழில்நுட்ப பயிற்சி நெறிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம்(09)  கல்கிசையில் உள்ள தென்கிழக்கு கல்வி நிலையத்தில் உபவேந்தா் பேராசிரியா் எம்.எம். நாஜிம் தலைமையில்நடைபெற்றது. 

இந் நிகழ்வுக்கு கொழும்பில் உள்ள கைத்தொழில் சாா் சம்பந்தமான நிறுவனங்களின் தலைவா்கள் பணிப்பாளா்கள் கலந்து கொண்டனா். பல்வலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் கைத்தொழில் தொழில்நுட்ப பயிற்சிகளுக்கான இணைப்பாளா் கலாநிதி  ரீ.ஏ பியசிரி, தென்கிகழக்கு பல்கலைக்கழகத்தின்  இத்துறைக்கான பீடாதிபதி கலாநிதி எம். ஜி தாரிக், உயிரியல் விவசாயம் சம்பந்தமான தொழில்நுட்ப பீடத்தின் தலைவா் கலாநிதி பி.ஜி.என்  செவ்வந்தி,  தகவல் தொழில்நுட்பம்  பட்டத்திற்கான எஸ்.எல். அப்துல் ஹலீம் ஆகியோறும்  தென்கிழக்கு பல்கலைககத்தில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட  இப் பயிற்சி நெறிகள் பற்றியும் விளக்கங்களை அழித்தனா்.

இப் பயிற்சி நெறிகள் கைத்தொழிற்சாலைகள். பேட்டைகள்  விவசாயம்,   கனணி தொழில்நுட்பம்,  போன்ற பல்வேறு தொழில்நுடபத்துறை சாா்ந்த பட்டப்படிப்பினை முடித்தவா்களுக்கு  செய்முறைப் பயிற்சி  தொழில்வாய்ப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டது.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment