ஆங் சாங் சூகியிடம் நோபல் பரிசு உள்ளமை அவமானம்.

மனித வரலாற்றில் மிகப்பெரும் அநியாயங்களையும், வக்கிர படுகொலைகளையும் சந்திக்கும் மியன்மார் முஸ்லிம்கள் விடயத்தில் துருக்கி நாட்டின் அக்கறையை உலமா கட்சி பாராட்டியுள்ளது.
அத்துடன், மியன்மார் ஜனாதிபதி ஆங் சாங் சூகியின் சமாதானத்துக்கான நோபல் பரிசு இன்னமும் அவரிடம் இருப்பது, நோபல் பரிசுக்கே பெருத்த அவமானம் என்றும் உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று காலை உலமாக் கட்சியின் கல்முனைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பர்மா முஸ்லிம்களை இந்த நிலைக்கு கொண்டு வர பல திட்டங்கள் அந்நாட்டு அரசால் அமுல்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கல்வியில் அவர்கள் உரிமை மறுக்கப்பட்டனர். அவர்களின் இனத்துவ அடையாளங்கள் இல்லாமலாக்கப்பட்டன. அண்டைய நாடுகளுடனான உறவுகள் துண்டிக்கப்பட்டன.
இவ்வாறு பல விடயங்கள் அரச தரப்பால் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல வருடங்களாக பர்மா முஸ்லிம்கள் திட்டமிட்ட வகையில் பிற்படுத்தப்பட்டதோடு அடிக்கடி படுகொலைகளுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்.
பர்மா முஸ்லிம்கள் மீது அரங்கேறும் மிலேச்சத்தனமான அத்துமீறல்களை உலக நாடுகள் பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் மனிதாபினம் செத்து விட்டது என்றே தோன்றுகிறது.
பர்மா முஸ்லிம்கள் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ஆட்சியாளர்களினாலும் சில பௌத்த பயங்கரவாதிகளாலும் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இராணுவம் அந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய காலம் முதல் இத்துன்பம் அதிகம் தொடர்கிறது.
பர்மாவில் இன்னமும் இராணுவத்தின் அதிகாரமே உள்ளது. அங்கு ஜனநாயக ஆட்சி ஏற்பட்டால் முஸ்லிம்களுக்கு ஓரளவு பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அங்கு ஆங் சாங் சூகி தலைமையில் ஜனநாயக மாற்றம் ஏற்பட்டும் முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்கள் குறையவில்லை.
சமாதானத்துக்கான பரிசு பெற்ற ஆங் சாங் சூகியும் இது விடயத்தில் ஒரு பக்க சார்புடன் நடப்பதன் மூலம் சமாதானத்துக்கான பதவிக்கே அவமானம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் பர்மா முஸ்லிம்கள் பற்றி முஸ்லிம் நாடுகளுக்கோ, ஐ.நா சபைக்கோ, அமெரிக்கா கூட்டு நாடுகளுக்கோ அக்கறை இல்லை.
சத்தாம் கொடுமை படுத்துகிறார் என ஈராக்குக்குள் புகுந்த அமெரிக்க நேசப்படைகள், லிபியாவுக்குள் புகுந்த படைகள், ஐ.எஸ்ஸை ஒழிக்க புகுந்த படைகள் பர்மா விடயத்தில் மௌனமாக இருக்கின்றன.
காரணம் அம்மக்களிடம் பெற்றோல் இல்லை என்பதைத்தவிர வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment