மட்டு-கல்லடியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)


'டெங்கை ஒழிப்போம் உயிர்காப்போம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி விநாயகர் வித்தியாலயம் ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் 15-09-2017 வெள்ளிக்கிழமை மட்டு-கல்லடி மணிக்கூட்டு கோபுரம் முன்பாக இடம்பெற்றது.கல்லடி விநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் ஈ.தியாகலிங்கம் மற்றும் வித்தியாலய ஆசிரிய,ஆசிரியர்கள் இணைந்து ஏற்பாடு செய்த மேற்படி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு கல்லடி விநாயகர் வித்தியாலய சுகாதாரக்கழகம் அனுசரனை வழங்கியிருந்தது.இவ் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்ட சிறு வயதைச் சேர்ந்த பாடசாலை மாணவ,மாணவிகள் சூழலை சுத்தமாக பேணுவோம்,நுளம்பு பெருகும் இடங்களை அழிப்போம்,வீதியில் குப்பைகளை போடாதீர்கள்,தண்ணீரை நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பாவிப்பதை தவிர்ப்போம்,சுத்தமான சூழலை உருவாக்குவோம்,குப்பைகளை எரிக்காதீர்,பெற்றோர்களே டெங்கிலிருந்து உங்கள் பிள்ளைகளை காப்பாற்றுங்கள்,டெங்கை ஒழித்து அரசின் பாரிய மருத்துவ செலவைக் குறைப்போம்,எமது சூழலை பாதுகாப்பது எமது கடமை,போனால் வராது உயிர் அதை டெங்கில் இருந்து பாதுகாப்போம்,டெங்கு நோயை ஒழிப்போம்,கிணற்றிற்கு மூடி இட்டு டெங்கு நுளம்பின் பெருக்கத்தை தடை செய்வோம்,டெங்கை ஒழிப்போம் போன்ற பல்வேறு தமிழ் வாசகங்கள் எழுதப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியிருந்தனர்.இதன் போது சூழல் காத்து டெங்கு நோயற்ற சமூகத்தை நாம் படைப்போம் எனும் துண்டுப் பிரசுரம் ஒன்றும் விநியோகிக்கப்பட்டது.மட்டு- கல்லடி விநாயகர் வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பழைய கல்முனை வீதி ஊடாக வக்கர் மாவடி வீதியினூடாக புதிய கல்முனை வீதிக்கு சென்று கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்தை அடைந்து அங்கிருந்து கல்லடி மாரியம்மன் கோயில் வீதியினூடாக மீண்டும் பாடசாலைக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment