விசேட தேவையுடையோரின் தொடர்பாடல் மொழியான சைகை மொழிக்கு அங்கீகாரம்.

சைகை மொழியை அங்கீகரிப்பதற்கான, ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு உரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சைகை மொழியானது’ விசேட தேவையுடைய நபர்களின் தொடர்பாடல் மொழியாக, அங்கவீனம் தொடர்பான தேசிய கொள்கையின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக, சைகை மொழியை ஏற்படுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், பிரேரிக்கப்பட்டுள்ள சைகை மொழி சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment