அடிக்கல் நாட்டு விழாக்களை அரசு தடைசெய்யவேண்டும்.

மன்னிக்கவும், தலைப்பை மட்டும் வாசிக்கும் வாசகர்களுக்கான கட்டுரையல்ல இது.

சேவைகளை மட்டும் தமது முழுநேரப் பணியாக செய்த நேர்மையான சமூகத் தலைவர்கள் எம்மவிட்டுப் பிரிந்துவிட்டார்கள் நேற்று, வியாபார நோக்கில் அரசியல் செய்யும் குறுநில மன்னர்களைதான் இப்போது நாம் அரசியல் தலைவர்களாக தோலில் தூக்கி மாலைபோட்டு அழங்கரித்துவருகின்றோம்.

பல இலட்சம் ரூபாய் செலவில் விளம்பரங்கள் செய்து, பல கட்சி உறுப்பினர்களின் அன்றாட தொழில் நேரங்களை வீண‌டித்து, பாதைகளை மூடி, பல பொலிஸ் உத்தியோத்தர்களின் சங்கிளித்தொடர் பாதுகாப்புடன் தலைவர் வருகிறார்.................... எதுக்கு...? அடிக்கல் நாட்டு விழாவுக்கு தான்.

இத்தனை செலவுக்கு பின் நாட்டப்பட்ட 'அடிக்கல்'  சில காலங்கள் பின்னால் அடியோடு காணாமல் போய் அரசியல்வாதிகளுக்கும் அவர் கட்சிக்கும் அடிமனதிலிருந்து மறந்து போய்விடுகிறது.

30 வருடங்கள் கடந்தும் அகதியாக வாழும் நம் சமூகத்திற்கு ஒரு மலசல கூடத்தையாவது நிர்மாணித்துத் தரமுடியாத தலைவர்கள் முழு நாட்டு மக்களுக்கும் கக்கூஸ் கட்டப் போவதாக கதை விடுவது எவ்வளவு அபத்தமான வார்த்தை.....?

பாடசாலை, பல்கலைக்கழம், துறைமுகம் என்று பெரும் திட்டங்களை நம் சமூகத்திற்கு சேவையாகச் செய்து தந்துவிட்டு மறைந்த தலைவர்கள் அடிக்கள் நாட்டு விழாக்களை கவனத்தில்கொண்டதில்லை தங்கள் அரசியல் வாழ்வில்.

வீண் செலவுகளை ஏற்படுத்தும் அடிக்கல் நாட்டு விழாக்களை மறந்துவிட்டு சமூகத்தின் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கு ஏற்றாற் போல் சேவைசெய்ய ஒன்றிணையுமாறு தம் தலைவர்களை அன்பாய் அழைக்கின்றேன்.

தளபாடங்கள், ஆசிரியர்கள் இல்லா பாடசாலைகளில் நம் குழந்தைகள் கல்வி கற்கும் இந்த நிமிடத்தில் கல்முனையை துபாய் போன்று மாற்றுவேன் என்று வார்த்தையின் / வாக்கின் விபரீதம் தெரியாது வாய் திறந்து வாக்களித்த மக்களை மடயர்களாக்கும் முயற்சி ஒரு சமூகத்துரோகமான செயலாகும்.

மாற்றங்கள் தேவை.
இஸ்ஸதீன் றிழ்வான்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment