மத்தியமுகாம் பிரதேசத்தில் 2 ஆம் கட்ட குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

(எம்.எம்.ஜபீர்)

மத்தியமுகாம் பிரதேசத்தில் 2ஆம் கட்ட குடிநீர் வழங்கும் வேலைத்திட்டங்களை நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நேற்று ஆரம்பித்து வைத்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாவிதன்வெளி அமைப்பாளர் ஏ.சி.நிஸாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாசபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாரை மாவட்ட உதவி பொது முகாமையாளர் எம்.எம்.நஸீல், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாரை பிரதம பொறியிலாளர் எம்.ரீ.ஏ.பாவா, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை பிராந்திய பொறியிலாளர் எஸ்.சதீஸ், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபையின் உறுப்பினர் எம்.ஐ.தஜாப்தீன், மத்தியமுகாம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம்.ஏ.நாஸர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் 200 மில்லியன் ரூபா செலவில் 60 கிலோமீற்றர் தூரத்துக்கு குடிநீர் குழாய் விஸ்தரிக்கப்படவுள்ளது. சாளம்பைக்கேணி 01, 02, 03, 04, 05, மற்றும் நாவிதன்வெளி, 04ஆம் கிராமம் ஆகிய இடங்களை சேர்ந்த சுமார் 600 மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளனர்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment