குழந்தைகளுக்கு வாழ்க்கைப் பாடமாகும் ‘சாப்பாட்டு மேசை’


குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்று தர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு சரியான இடம், உங்கள் வீட்டு சாப்பாட்டு மேஜைதான். இதனை சரியான முறையில் நீங்கள் தொடங்கவேண்டுமானால், முதலில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த பழக்கம் உருவான பின்பு குழந்தைகளுக்கு எப்படி சரியாக சாப்பிடுவது என்பதை கற்றுக்கொடுக்கவேண்டும். அதன் மூலம் அவர்கள் சிறந்த வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்வார்கள்.

உணவை கீழே சிந்தாமல் சாப்பிடுவதும் குழந்தைகளுக்கு தரவேண்டிய சிறந்த பயிற்சி. தேவையான அளவுக்கு மட்டும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து எடுத்து வைத்துக்கொண்டு வீணாக்காமல் சாப்பிடுவதற்கு பழக்கப்படுத்தவேண்டும். இது தேவை, பகிர்வு, கவனம் சிதறாத செயல் போன்றவைகளை குழந்தைகளுக்கு கற்றுத்தரும்.

குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் இருந்து தனது பெற்றோர் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதை பார்த்துக்கொண்டே வளரும். அவர்கள் எப்படி சாப்பிடுகிறார்களோ அதே முறையில்தான் குழந்தையும் சாப்பிடத்தொடங்கும். அதனால் குழந்தைகள் பிறந்த பின்பு, முதலில் பெற்றோர் சரியாக சாப்பிடக் கற்றுக்கொள்ளவேண்டும். சாப்பாட்டு மேஜை நாகரிகத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். அதை பார்த்து குழந்தைகள் பழகவேண்டும்.

குழந்தைகளின் செயல்திறனை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் சிலர், அந்த குழந்தைகளை சாப்பாட்டு மேஜையில் அவர் களது இஷ்டத்திற்கு சாப்பிட அனுமதித்தார்கள். அவர்கள் எந்த மாதிரியான உணவுகளை தேர்ந்தெடுத்தார்கள். அதை எப்படி தங்கள் சாப்பாட்டுத்தட்டில் எடுத்துவைத்தார்கள். எப்படி சாப்பிட்டார்கள். அப்போது அருகில் அமர்ந்திருக்கும் குழந்தைகளிடம் எப்படி அணுகினார்கள் என்பதை எல்லாம் கண்காணித்தார்கள். 

அதன் மூலம் அவர்களது செயல்திறனை அளவிட்டார்கள். அவர் களது இயல்பு என்ன? அவர்களிடம் எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் தேவைப்படும் என்பதை எல்லாம் கணித்தார்கள். அந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதையும் அவர்களது சாப்பாட்டு முறை மூலம் கண்டறிந்துவிட்டார்கள். 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment