அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களுக்கான மேலதிக சேவைகளுக்கு 1500 ரூபா அறவிட தீர்மானம்.

அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களுக்கான மேலதிக சேவைகளுக்கு 1500 ரூபா கட்டணத்தை அறவிடுவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களுக்கு மேலதிக சேவைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலதிக சேவையில் ஒரு தடவை பஸ்களை ஈடுபடுத்தும் போது 1500 ரூபா அறவிடப்படுவதால் பாரிய சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என அதிவேக வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் சாரதிகளும் , பஸ் உரிமையாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
13 இலட்சம் ரூபா செலுத்தி போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டுள்ள போது மேலதிக கட்டணங்கள் அறவிடப்படுவது அசாதாரண விடயம் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment