டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 வீதம் குறைவடைந்துள்ளது – சுகாதார அமைச்சு.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 வீதம் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 937 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுமார் 2000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்றதாக அமைச்சர் கூறியுள்ளார்.
பொரளை மருத்துவ ஆராய்சி நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 250,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.
இதேவேளை தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரிக்கக் கூடும் எனவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment