சாகித்திய விருது விழாவில் வைத்தியர் நௌஷாத் அவர்களின் '' சொர்க்கபுரிச் சங்கதி'' க்கும் விருது.


19வது கொடகே தேசியச் சாகித்திய விருது விழா செப்டம்பர் 14ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள், மற்றும் கொடகே நிறுவனர் சிரிசமன கொடகே, திருமதி நந்தா கொடகே , இலக்கியு்ப புரவலர் ஹாசிம் உமர் மற்றும் பலர் மங்கள விளக்கேற்றி விழாவினை ஆரம்பித்து வைத்தனர்.

2016 ஆம் வெளிவந்த சிங்களம், தமிழ் , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கலை இலக்கிய நூல்களுக்கு விருதுகளும் பணமுடிப்பும் ,சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தமிழில் 2016 ஆண்டு சிறந்த சிறுகதை நூலுக்கான கொடகே தேசியச் சாகித்திய விருதினைச் சிவனு மனோகரின் 'மீன் தின்ற ஆறு'' எனும் நூலுக்கும், சிறந்த கவிதை நூலுக்கான விருதினை அன்புடீனின் 'தொப்புள் கொடியும் தலைப்பாகையும்'' எனும் நூலுக்கும், சிங்களத்தில் எழுதப்பட்ட வரலாற்று நாவலான விமலா ஆரியரத்ன வின் '' மாத்தளைப் போராட்டத்தின் கதை' எனும் நூலினைத் தமிழில் மொழிபெயர்த்த மலரன்பனுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதும், தமிழ் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை சிங்களத்தில் மொழிபெயர்த்த சரத் ஆனந்தாவுக்கு சிங்கள மொழிபெயர்ப்புக்கான விருதும், ஏ.எம்.அஸ்கரின், '' இந்தக் காலைப் பொழுது'' எனும் முதல் கவிதை நூலுக்கான விருதும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் சம்மாந்துறையைச் சேர்ந்த வைத்தியர் எம் நௌஷாத் அவர்கள் எழுதிய '' சொர்க்கபுரிச் சங்கதி'' எனும் நூலுக்கு முதல் சிறுகதை நூலுக்கான விருது வழங்கி வைக்கப்பட்டது.

நன்றி - அவதானி.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment