வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதற்கு அதிகாலை மற்றும் இரவு நேரம்தான ஏற்றதாம்.

வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதற்கு அதிகாலை மற்றும் இரவு நேரம்தான ஏற்றது என்கின்றனர் ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள். பெட்ரோல் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது.

எனவே, குளிர்ச்சியான சமயங்களில் பெட்ரோல் நிரப்பும்போதுதான் அதன் அடர்த்தி சரியானதாக இருக்கும். பகல் வேளைகளில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும் என்பதால், அதன் அடர்த்தி குறையும். இதனால், நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பும்போது அது சரியான அளவு இருக்கும் என்பது சந்தேகம்தான்.

மதியம், மாலையில் பெட்ரோல் நிரப்பினால், அளவு சரியாக இருக்காது. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவதே புத்திசாலித்தனம் என்கின்றனர் ஆட்டோமொபைல் துறையினர்.

அளவு சரியாக இல்லாதபட்சத்தில் வாகனத்தின் மைலேஜ் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதிகாலை அல்லது இரவு நேரத்தில் பெட்ரோல் போடுவது நல்லது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment