கைகூப்பி வணக்கம் சொல்வது ஒரு தெய்வ நிகழ்வல்ல. அது ஒரு உடல் ரீதியான செய்கை ரீதியான மொழி.


கைகூப்பி வணக்கம் சொல்வது ஒரு தெய்வ நிகழ்வல்ல. அது ஒரு உடல் ரீதியான செய்கை ரீதியான மொழி. 

ஹக்கீம் கைகூப்பினார் என்பது மட்டுமே உங்களுக்கு புலப்பட்டது மாறாக அவரது எண்ணத்தை உங்களால் அறிய முடியாதல்லவா?

செயல்களை விடவும் எண்ணங்களின் அடிப்படையையும் ஆராய்கின்ற சக்தியை இறைவன் அல்லாத எவருக்குமே வழங்கப்படவில்லை. அதையும் அறியக்கூடியவன் ஒருவன் உள்ளான்.

இலங்கையில் பல இஸ்லாமிய இயக்கங்கள் உள்ளது. சில இயக்கவாதிகள் ஒரு கையை குழுக்கி ஸலாம் சொல்கிறார்கள். இன்னொரு குழு இரண்டு கையை குழுக்கி ஸலாம் சொல்கிறார்கள். இது ஒரு செய்கை மொழியே தவிர கை கொடுப்பவரை வணங்குவதாக அர்த்தம் கொள்ள முடியாது.
வணக்கம், நமஷ்த்தே நமஷ்கார் சுவாகதம் கும்பிடுதல் ஆயுபோவன், Good mornig, Good evening இது எல்லாமே ஒரு கருத்தாகும்.

அதாவது வரவேற்பதற்கான வழிமுறையே தவிர மதம்மாறுவதற்கான மார்கம் அல்ல. அல்லாஹ் அல்லாத எவருக்குமே அடுத்தவர்களுடைய உள்ளங்களை அறியக்கூடிய சக்தியை கொடுக்கவில்லை.

கைகூப்பி ஹராம் அல்லது ஷிர்காக இருந்தால் கை குழுக்கி ஸலாம் சொன்னவர்களும் ஷிர்க் செய்துவிட்டவர்களாக கருதப்படும்.

ஆகவே ஹக்கீம் கைகூப்பி கும்பிட்டதால் அவர் பௌத்தரமல்ல, மாறாக மைத்ரி சலாம் சொல்வதால் இஸ்லாமியரும் அல்ல. மேலும் இஸ்லாம் மிக இலகுவானதும் தூய்மையானதும் நேர்மையானதுமான மார்க்கம் அதில் அறைகுறையாக புரிதல்களை கொண்டவர்கள் பத்வாக்களை கொடுக்க முற்படாது நல்ல உலமாக்களிடமோ அல்லது மார்க்க அறிஞர்களிடமோ தங்களுக்குள் ஏற்படுகின்ற ஐயங்களை கேட்டு தெரிந்து அலசி ஆராய்ந்து பதிவுகளை சமூகவலைத்தளங்களில் பதிவிடுங்கள். 

ஏனெனில் கண்ட கண்டவர்கள் எல்லாம் எமது மார்க்கத்தில் பத்வாக்கள் கொடுக்க முற்பட்டதன் தாக்கமே கடந்த ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை மூன்று நாட்கள் தொழப்பட்டுள்ளது. இதுவும் உலகழிவின் அறிகுறிகளில் ஒன்றாகவே நோக்கப்படுகிறது.

ஹக்கீம் கைகூப்பி கும்பிடுவது இது முதற்தடவையுமல்ல, அது இஸ்லாமிய சட்டத்தில் குற்றமாக இருக்குமானால் மீண்டும் மீண்டும் அதனைச்செய்ய அவர் ஒன்றும் அறிவிலியும் அல்ல. ஒரு வேளை அது மகா குற்றமாக இருந்தால் ஏன் இன்னும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அவரை அழைத்து பத்வா கொடுக்கவில்லை?

Noora Mansoor
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment