சவுதி அரேபியா றியாத்தில் என் கண்களை கலங்க வைத்த ஒரு பெண்ணின் நிலை.

றிஸ்வான் நிஜாமுடீன்.

எனது தொழில் டக்ஷ்சி சாரதி நான் வேலை முடிந்து வீடு செல்லும் போது இடையில் என்னை நிப்பாட்டி இந்த பெண்ணை எட்டாம் நம்பர் இடத்துக்கு கூட்டிக் கொண்டு போறீங்களா என்று கேட்டார் அந்த பெண்ணோடு வந்த அந்த வீட்டு சாரதிஇவர் இந்திய நாட்டை சேர்ந்தவர். நான் கூறினேன் 30 ரியால் தாருங்கள் என்றேன் குறைக்க முடியாதா என்று கேட்டு உடன் பட்டார். 

பின்னர் அந்தப் பெண்னை ஏற்றிக்கொண்டு போகும் வழியில் நான் கேட்டேன் உங்களுக்கு எட்டாம் நம்பருக்கு போனால் உங்களுக்கு இடம் தெரியும் என்று உங்களை ஏற்றிய சாரதி சொன்னார் உங்களுக்கு தெரியுமா என்றேன் இல்லை எனக்கு தெரியாது என்றால் அந்த பெண். உடனே கூறினேன் நீங்கள் செல்லும் வீட்டாரின் நம்பர் உள்ளதா என்று ஆம் உள்ளது என்றால் உடனே தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்றேன் ஆனால் அவளிடம் மொபைலும் இல்லை.எனது போனை கொடுத்து அழைப்பை ஏற்படுத்துங்கள் என்று கூறினேன் ஆனால் மொபைலோ ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.

ஆம் இப்போது தான் பெண்ணுக்கு பயம் ஏற்படுகிறது. இந்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். நாட்டுக்கு அழைப்பை ஏற்படுத்த முடியுமா என்றால் முடியும் என்றேன் அழைப்பை ஏற்படுத்தினால் எடுத்து இந்த நம்பருக்கு அழைப்பை ஏற்படுத்துங்கள் என்று அந்த பெண் தாயிடம் கூறினால். ஆனால் அவர்களோ விடிந்ததும் தான் அழைப்பை ஏற்படுத்தினார்கள்.

இதற்கு இடையில் நான் என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள உடன் பட்டால் அல்லாஹ் என்னை பாதுகாத்தான். அவளுக்கு நல்ல முறையில் வழி காட்டினேன். அது தான் அவளை அந்த நாட்டின் Embassyயிடம் கூட்டிச் சென்றேன் அங்கே மூடப்பட்டு இருந்தது. பிறகு policeயிடம் கூட்டிச் சென்றேன் அங்கேயும் மூடப்பட்டு இருந்தது.

வேறு இரவு நேரக் காவலாளி வந்தார் என்ன பிரச்சனை என்று கேட்டார் அந்த பெண் கூறினாள் நான் இங்கு வந்து இரண்டரை வருடங்கள் ஆகின்றன நான் முன்னாடி ஒரு வீட்டில் வேலை செய்தேன் பிறகு அந்த வீட்டுக் காரன் வேறு வீட்டுக்கு அனுப்பி விட்டார் அந்த வீட்டுக்கார்களோ எனக்கு சம்பளம் தரவில்லை கேட்டால் அடிக்கிறார்கள் நாட்டுக்கு அனுப்ப சொன்னாலும் அடிக்கிறார்கள் எனது கைபேசியயும் எடுத்து விட்டார்கள் ஆகையால் நான் வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டேன் என்றால் அந்த பெண்.காவலாளி அந்த வீட்டுக்கு போகலாமே என்றார் அந்த முடியாது என்று அழுது விட்டாள்.


உடனே காவலாளி கூறினார் olaya policieல் கூட்டிச் செல்ல நானும் கூட்டிச் சென்றேன் அங்கே இருந்த காவலாளி சொன்னார் இங்கு இந்த மணிநேரத்தில் ஏன் வந்தாய் என்று கேட்டு என்னை திட்டினார் பிறகு வேறு இடம் கூறினார் கூட்டிச் சென்றேன் அங்கேயும் வேறு இடம் கூறினார். பிறகு நான் கூறினேன் இதற்கு பிறகு என்னால் முடியாது நான் உங்களைப் பிலிப்பைன்ஸ் Embassyயில் கொண்டு போய் விடுகிறேன் அங்கே இன்னும் ஒரு இரு மணிநேரம் இருக்கும்​படி கூறினேன் ஆனால் முடியாது என்றால் பயமாக உள்ளது என்று கூறினால்.

ஆணாக இருந்தால் கூட்டிச் சென்று இருப்பேன். பெண் என்பதால் இதை செய்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்ற காரணத்தால் அந்த பெண்ணை​இங்கு நீங்கள் இருந்து தான் ஆகவேண்டும் நானும் அழுத்தமாக கூறினேன் ஏற்றுக் கொண்டால் விட்ட பிறகு நான் வேறு வழியாக வந்து பார்க்கிறேன் எனது கண்களால் கண்ணீர் வந்து விட்டது. ஏன் என்றால் பூனை தூங்கிய கதிரயில் பூனையை அனுப்பி விட்டு அவள் தூங்கும் காட்சியே என் மணம் உடைந்து விட்டது. இதை அவளை பெற்றெடுத்த தாய் தந்தை பார்ப்பார்கள் என்றால் எப்படி இதை தாங்கி கொள்வார்கள்.

இவ்வளவும் நடந்து முடிந்த நேரம் இரவு 
1.am . மணியில் இருந்து 3.30 am. மணி வரை.

எதற்காக நான் இதை சொல்லுகிறேன் என்றால். தவறான ஆணிடம் இந்த பெண் சென்று இருந்தால் இவளின் நிலமை மோசமாக இருந்து இருக்கும். இதை விட மோசமான முறையில் நமது நாட்டு பெண்கள் இங்கு வலுக்கட்டாயமாக ஆண்களால் கெட்ட நடத்தைக்கு உரியவளாக மாறுகிறார்கள் . பிறகு அதையே தொழிலாக செய்கிறார்கள்.

எனது கண்களால் கண்டது எத்தனையோ உள்ளது இதை எழுதுவதற்கு என்னால் முடியாது..

இது எதனால் ஏற்படுகிறது என்றால் இஸ்லாமிய வழிமுறையில் திருமண வாழ்க்கையை நடைமுறைப் படுத்தாமல் பெண்களின் வீட்டிலேதான் திருமண வாழ்க்கை நடத்துவோம் என்று சிந்திக்கும் கேடுகெட்ட ஆண்களே இதற்கு காரணம்.

இதை எழுதுவதற்கான நோக்கம்.

பெண் பிள்ளைகளை பெற்ற அன்புள்ள தாய் தந்தையர்களே உங்கள் பெண் பிள்ளைகள் விஷயத்தில் அதிகமாக அல்லாஹ் வை பயந்து கொள்ளுங்கள் இதற்கு நீங்களும் காரணமாக உள்ளீர்கள்.

அல்லாஹ்மீது முழு நம்பிக்கை கொண்டவர்களாக முயற்சி எடுங்கள் பெண்களுக்கு அல்லாஹ் ரஸுல் சொன்ன வழியில்​ மட்டுமே திருமணம் முடித்து கொடுப்போம் என்று நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை உள்ளவர்களுடனே இருக்கிறான்.

1 இஸ்லாமிய வழியில் பெண்ணிடம் வீடு எடுப்பது ஹராம்.
2 இஸ்லாமிய வழியில் பெண் வீட்டில் சீதனம் பணம் எடுப்பது ஹராம்.
3 வளீமா விருந்து ஆண் தரப்பால் கொடுப்பதே சுன்னா.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment