ஓட்டமாவடி ஹிஜ்ராவின் காணிக்கொள்வனவிற்கு நாபீர் பெளண்டேசன் நிதியுதவி.


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.

கல்குடா-ஓட்டமாவடி 3ம் வட்டாரத்தில் 1988ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பப் பாடசாலையானது தற்பொழுது புதிய கல்விச்சுற்று நிரூபத்தின் கீழ் ஊட்டல் பாடசாலையாக இருந்து வருகின்றது. குறித்த பாடாசாலைக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகின்ற காணியினைக் கொள்வனவு செய்வதற்காக சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபதகத் தலைவரும் பொறியியலாளருமான அல்ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் நேற்று 11.09.2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாடசாலைக்கு நேரடியாக விஜயஞ்செய்து பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் அதிபர் ஜனாபா செய்னம்பு ஹமீட்டிடம் ஒரு தொகைப்பணத்தினை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். 

பிரதேசத்தில் மிகவும் வறுமைக்கோடிற்கு கீழ் வாழுகின்ற மக்கள் மத்தியில் அமையப்பெற்றுள்ள குறித்த பாடசாலையானது, ஆரம்ப சிறார்கள் ஆரோக்கியமாக கல்வி கற்பதற்கான இடப்பற்றாக்குறை, திறந்த வெளியில் காலை நேர உடற்பயிற்சிகள் செய்ய முடியாத நிலை மற்றும் கல்வி கற்பதற்கான ஒழுங்கான கட்டட வசதியின்மை, சிறார்கள் விளையாடுவதற்கு ஓர் திறந்த வெளியின்மை அல்லது போதிய இடப்பாற்றாக்குறை போன்ற பல குறைபாடுகளைக் கொண்டே 1988ம் ஆண்டு தொடக்கம் பிரதேசத்தில் எவரும் கேட்பார் பார்ப்பாரற்ற நிலையில் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளுடன் இயங்கி வருகின்றமையினை மிக முக்கியமாக கல்குடா முஸ்லிம் சமூகம் கவனத்திலெடுத்துச் செயற்பட வேண்டிய விடயமாகும். 

அந்த வகையில், அல்லாவிற்கு மிகவும் விருப்பாமன நிலையான தர்மம் என்ற வகையில் ஓட்டமாவடி ஹிஜ்ரா ஆரம்ப ஊட்டல் பாடசலைக்கு மிக முக்கியத்தேவையாக இருக்கின்ற இடப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து கொடுப்பது கல்குடாப் பிரதேசத்தில் மட்டுமல்லாது, ஏனைய பிரதேசங்களில் வாழுகின்ற ஒவ்வொருத்தரினதும் கடமையாகும் என்பதனை பாடசாலைச் சமூகமும், நிருவாகமும் ஞாபகப்படுத்திக் கொள்ளும் அதே நேரத்தில், உதவிகளைக் குறைவில்லாமல் வாரி வழங்கி பாடசாலையின் தேவையினைப் பூர்த்தி செய்து தருமாறு வேண்டி நிற்கின்றது. 

அத்தோடு, இது வரைக்கும் முடியுமான வரையில் உதவிகளைச் செய்துள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதில் பாடசலை நிருவாகம் பெருமகிழ்ச்சியடைவதாகத் அதிபர் ஜனாபா செய்னம்பு ஹமீட் தெரிவிக்கின்றார். 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment