உலக அஞ்சல் தினம் -காத்தான்குடி அஞ்சல் அலுவலகத்தில் அனுஷ்டிப்பு.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தினால் பிரகடனம் செய்யப்பட்டு ஓக்டோபர் மாதம் 9ம் திகதி சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படும் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் 2017 செப்டெம்பர் 25 தொடக்கம் 30 வரை அஞ்சல் ஊக்குவிப்பு வாரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக காத்தான்குடி தபால் நிலையம் ஏற்பாடு செய்த உலக அஞ்சல் தின நிகழ்வு 25 இன்று திங்கட்கிழமை காத்தான்குடி அஞ்சல் அலுவலகத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச தபால் அதிபர் கே.எம்.மஸாஹிர் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி உலக அஞ்சல் தின நிகழ்வில் அஞ்சல் சேவகர் கே.கேதீஸ்வரன் உட்பட காத்தான்குடி தபால் நிலையத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ,அஞ்சற்காரர்கள் ,பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி தபால் நிலையத்திற்கு வருகைதந்த பாடசாலை மாணவர்களுக்கு விரைவு பணப்பரிமாற்றம்,ஒண்லைன் கொடுப்பனவு சேவை,உள்நாட்டு,வெளிநாட்டு விரைவு தபால் சேவை,வெஸ்டன் யூனியன் பணப்பரிமாற்றம்,தேசிய சேமிப்பு வங்கி கொடுக்கல் வாங்கல்கள்,நிறை கூடிய பொதிகள் பரிமாற்ற சேவை ,பெறுமானம் கட்டிப்பெறும் பொதிகள் சேவை உள்ளிட்ட தபால் நிலையத்தின் சேவைகள் தொடர்பில் அஞ்சல் சேவகர் கே.கேதீஸ்வரனினால் விளக்கமளிக்கப்பட்டதுடன்,காத்தான்குடி தபால் நிலையத்தின் பல்வேறு பிரிவுகளும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இங்கு நூற்றாண்டுகள் கடந்தும் தொடருகின்ற இலங்கை அஞ்சல் சேவையின் அனைத்து சேவைகள் அடங்கிய துண்டுப்பிரசுரம் ஒன்றும் விநியோகிக்கப்பட்டது.

அத்துடன் இன்றைய தினம் காத்தான்குடி தபால் நிலையத்திற்கு வருகைதந்த பொது மக்களுக்கு மிக விரைவான முறையில் தபால் நிலையத்தின் சேவைகள் வழங்கப்பட்டதுடன் சிற்றுண்டி மற்றும் குடிபானங்களும் வழங்கப்பட்டது.

குறித்த உலக அஞ்சல் தினம் ஒக்டோபர் 9, 1874 இல் சுவிற்சலாந்தின் பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாக பிரகடனம் செய்யப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment