கல்முனை வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளராக நிந்தவூர் எம்.ஏ.எம்.றஸீன் நியமனம்.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

கல்முனை வலய சமாதானக் கல்வி இணைப்பாளராக 2014ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த நிந்தவூர் எம்.ஏ.எம்.றஸீன் 2017.09.18ந் திகதியிலிருந்து கல்முனை வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலைப் பட்டதாரியான றஸீன் நிந்தவூர் பெரிய ஜூம்ஆப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளராகவும், அம்பாரை மாவட்ட அனைத்துப்பள்ளி வாசல்கள் சம்மேளனச் செயலாளராகவும், சம்மாந்துறைப் பொலிஸ் ஆலோசனைக் குழு செயலாளராகவும், இனநல்லிணக்கக் குழு அங்கத்தவராகவும் இருந்து அரும்பணியாற்றி வருகிறார்.

கல்முனை வலயத்தில் சமாதானக் கல்வி இணைப்பாளராக இருந்த காலத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள உறவுகளை வலுவடையச் செய்யக் கூடிய பல நிகழ்ச்சித் திட்டங்களை வடிவமைத்து, சிறப்பாய் நடைமுறைப்படுத்தி, வெற்றி கண்டவர்.

தற்போது இவர் சமாதானக் கல்வி இணைப்பாளரோடு, முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருப்பது கல்முனை வலய முன்பள்ளிகளின் அபிவிருத்திகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

நிந்தவூர் கமுஃஅல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆசிரியனாக இருந்த எம்.ஏ.எம்.றஸீன் நிந்தவூர்  கமுஃஅல்-அஷ்றக் தேசியக் கல்லூரி , பேராதனைப் பல்கலைக் கழகம், கொழும்பு திறந்த பல்கலைக் கழகம் போன்றவற்றின் பழைய மாணவருமாவார்.

எப்போதும் எறும்பு போல் சுறுசுறுப்பாகச் செயற்பட்டு சகல தரப்பினருடனும் மிகவும் அன்பாகவும், மரியாதையாகவும், கனிவுடனும் பழகும் இயல்பு கொண்ட எம்.ஏ.எம்.றஸீன் முன்னாள் நிந்தவூர்க் கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.எம்.அமீன், றைஹானத்தும்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வருமாவார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment