தன்னிடமிருந்த பழம்பெரும் நூல்களை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார் மருதுார் ஏ மஜீத்.

மூத்த எழுத்தாளரும் கல்விமானுமான மணிப்புலவர் மருதூர் ஏ மஜீட் அவர்கள் தன்னிடம் இருந்த பழம்பெரும் நூல்கள் 2786 ஐயும், அரியவகை பொருட்கள் பலவற்றையும்கடந்த 2017.08.21 ம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக அஷ்ரஃப் ஞாபகார்தத நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார்.

இந்நூல்கள் கையளிக்கும் நிகழ்வு கொழும்பு மருதானை, முகைதீன் மஸ்ஜித் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பதில் நூலகர் எம்.எம். மஸ்றூபாவிடம் கையளித்தார்.இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நஜீம், நூலக தகவல் உதவியாளர் பி.எம். ஹிதாயதுல்லா, ஈ.எல்.ஏ. சுபியான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல் - ஆதம்பாவா முஹம்மத் பறக்கத்துல்லா.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment