சம்மாந்துறையில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 17ஆவது வருட நினைவும் பிரார்த்தனையும் நிகழ்வு.

(எம்.எம்.ஜபீர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 17ஆவது வருட நினைவு தினைத்தை முன்னிட்டு இன்று சம்மாந்துறை பிரதேசத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹின் ஏற்பாட்டில் கத்தமுல் குர்ஆனும் துஆப் பிராத்தனையும் சம்மாந்துறை அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர் கே.எம்.முஸ்தபா தலைமையில் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் ஆளுமை போன்ற விடயங்கள் நினைவு கூறப்பட்டு உரைகளும் இடம்பெற்றதுடன் துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ.காதிர், சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் தலைவர் மௌலவி ஏ.சீ.ஏ.எம்.புஹாரி,  தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் மாணவர்கள், கட்சியின் போராளிகள், பொது மக்கள், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment