முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை திட்டம் போட்டு பறிக்கிறது இந்த நல்லாட்சி.

மஹிந்த ஆட்சியில் அளுத்கம பிரச்சினையும், பள்ளிகளைத் தாக்குகின்றார்கள் என்ற பிரச்சினையைத் தவிர வேறொரு பிரச்சினையும் இருக்கவில்லை, அதே நேரம் சில இனவாத விடயங்களில் இவர் கவணம் செலுத்தாமல் இருந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்களும் இருந்து வந்தது. அதனால் அவருடைய ஆட்சிக்கு எதிராக கொதித்து எழும்பி மாற்றிவிட்டோம்.

ஆனால் இந்த இனவாதிகளுக்கு பின்னால் இந்த நல்லாட்சிக்காரர்கள்தான் இருந்து வந்துள்ளார்கள் என்பது இப்போது நிரூபணமாகி வருகின்றது. மஹிந்த ஆட்சியை மாற்றுவதற்குத்தான் மேற்குலகின் திட்டத்தினூடாக இவர்கள் முஸ்லிம்களை தூண்டி தங்களுடைய காரியத்தை சாதித்துக்கொண்டார்கள் என்பதே உண்மையாகும். 

அதனை திட்டம் போட்டு சாதித்தவர்கள் இப்போது முஸ்லிம்களின் அரசியல் உரிமையையும் கேள்விக்குறியாக மாற்றிவருகின்றார்கள், அதற்கு நமது பாராளுமன்ற உறுப்பினர்களும் வேறுவழியில்லாமல் அதற்கு துணைபோகின்றார்கள் என்பதே ஆச்சரியமான விடயமாகும்.


ஆனால் முஸ்லிம் மக்களின் துணையோடு ஆட்சிக்கு வந்த இந்த நல்லாட்சியில்தான் மிக மோசமான இனவாத செயல்பாடுகள் நடந்து வருகின்றது. அதனை இந்த நல்லரசாங்கம் கண்டு கொள்ளவும் இல்லை, அந்த இனவாதிகளை தண்டிக்கவும் இல்லை.

மாறாக அவர்களுக்கு பாதுகாப்பும் பால்சோறும் கொடுத்து வருகின்றார்கள். இதனைக்கூட நமது முஸ்லிம்கள் கண்டுகொள்ளாமல் நல்லரசாங்கத்தை பாராட்டுவதிலேதான் குறியாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு இவர்கள் செய்யும் அநியாயங்கள் ஒன்றுமே கண்ணுக்குத் தெறிவதாகவும் தெறியவில்லை.


அடுத்ததாக, இந்த நல்லாட்சி இனவாதிகளின் கூடாரம் மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கு எதிரானது என்றெல்லாம் நாம் கூறிவந்தோம். இனவாதிகளின் கதையை கேட்டு மரிச்சிக்கட்டியை மறித்துக்கட்டியது, மாயக்கல்லில் சிலை வைக்க உதவி செய்தது, இனவாதிகளுக்கு பதவிகள் வழங்கி அவர்களுடைய செயல்பாட்டுக்கு ஊக்கமும் கொடுப்பது மட்டுமல்ல அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்தும் வருகின்றார்கள்.

இப்போது என்னவென்றால், அதைவிட மோசமாக முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளையும் திட்டம்போட்டு பறித்துவருகின்றார்கள். உள்ளூராட்சி திருத்தச் சட்டத்தை கொண்டுவந்து, நமது உறுப்பினர்களின் தொகையை குறைத்து எம்மை அரசியல் அநாதையாக மாற்றிவிட்டார்கள்.

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகையும் குறைக்கப்பட்டு அதிலும் அநியாயம் செய்துவிட்டார்கள். இப்போது மாகாணசபைக்கான சட்டதிருத்தத்தை கொண்டுவந்து அதிலும் நமது உறுப்பினர்களின் தொகையை குறைத்து அநியாயம் செய்து விட்டார்கள்.


இந்த சதிச்செயலுக்கு நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் உடந்தையாக இருந்துவருகின்றார்கள், அதிலும் குறிப்பாக முஸ்லிம்களின் குரல் நாங்கள்தான் என்று கூக்குரலிட்ட மு.காங்கிரஸ் என்ற கட்சிக்காரர்களும் அதற்கு துணை போயுள்ளார்கள். அதேபோல் நாங்கள்தான் மு.காங்கிரசை விட வேகமாக இயங்கக்கூடியவர்கள் என்று வீரநடைபோட்டு வந்த அ.இ.ம.காங்கிரசும் இந்த சதிகளுக்கு துணைபோயுள்ளார்கள்.

இதிலிருந்து தெறியவருகின்ற விடயம் இவர்களுக்கு சமூகத்தை விட பதவியும் பட்டமும்தான் முக்கியமானது என்பதாகும்.


முஸ்லிம்களை அரசியல்ரீதியாக மட்டம் தட்டும் விடயத்தில் பிரதமர் ரணில் அவர்கள் நன்றாகவே திட்டம்போட்டு செயல்பட்டு வருவதோடு, கச்சிதமாக காரியத்தை சாதித்தும் வருகின்றார். இதற்கு நமது கூஜாதூக்கிகள் தெறிந்து கொண்டும் துணைபோகின்றார்கள் என்பதுதான் வேதனையான விடயமாகும்.

ஆகவே நமது உரிமைகளை இந்த நல்லாட்சி அரசாங்கம் திட்டம் போட்டு பறித்து விட்டது என்பதே உண்மையாகும். இனிமேல் இந்த அநியாத்துக்கு பிராயசித்தம் தேடுவது என்றால் நடக்காத காரியம் என்பதை நமது முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ளாதவரை, நமது பாடு கோவிந்தாதான்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment