முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு பகிரங்க அழைப்பு விடுப்போம் - நாபிர் பவுண்டேசன்.


எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அதில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களை நாபீர் பவுண்டேஷன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றது. எம்முடன் பேச்சுக்கு வருமாறு உரிய காலம் வரும்போது சிரி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு பகிரங்க அழைப்பு விடுப்போம். எமது நிபந்தனைகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைமையேற்று அங்கரிக்கின்ற பட்சத்தில் எமது தணித்துவத்தை பேணியவாறு முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும். என பொறியியலாளரும், நாபீர் பவுண்டேஷனின் தலைவருமான யு.கே. நாபீர் தெரிவித்தார்.


மிக நீண்டகாலமாக நாட்டின் அரசியல் நடப்புக்களையும், கிழக்கு மாகாணத்தின் அரசியல் போக்குகளையும் நெருக்கமாக அவதானித்து வருகின்ற நாம் எதிர்வருகின்ற எந்ததத் தேர்தலாலும் அதில் போட்டியிடத் தயாராகவுள்ளது.

முஸ்லிம் சமூதாயத்தினை அடையாளப்படுத்துகின்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் காணப்படுகின்றது. வடக்கு கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் அடையாளத்தினை பெற்றவர்கள்தான் அனைவருமே காணப்படுகின்றார்கள்.

அண்மையில் சம்மாந்துறையில் நாபீர் பவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில் – வேறு எந்தக்கட்சி முஸ்லிம் கட்சிகளிடம் பேச்சு நடத்துகின்ற யோசனையோ அல்லது இணைந்து செயற்படுகின்ற நோக்கமோ எமக்கு கிடையாது. முஸ்லிம் காங்கிரஸ் தலைமை எம்மை அலட்சியம் செய்யுமாக இருந்தால் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் நாபீர் பவுண்டேஷன் கிழக்கு மாகாணத்தின் அனைத்து சபைகளிலும் சுயேட்சையாக போட்டியிடும்.

நாம் காண்கின்ற அரசியல்வாதிகள் நல்லவர்களாகயில்லை. மக்களை ஏமாற்றி சுரண்டுபவர்களாகவும்,மோசடிப் பேர்வழிகளாகவும், பகல் கொள்ளையர்களாகவும் காணப்படுவதுடன், ஆற்றல் அற்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள். 

அரசியல் மக்களுக்கானது, சமூதாயப்பற்றும், பொதுநல அக்கரையும் உள்ள திறமைசாலிகளே அரசியலில் ஈடுபட வேண்டும். இவை அனைத்தும் எமது முஸ்லிம் தலைமைகளிடம் இல்லாமையோடு, வியாபார அரசியலினை செய்து வருகின்றனர்கள். இதனாலே நாம்புதிய சிந்தனையுடன் அரசியலில் குதிக்கக் காரணமாகும். நாபீர் பவுண்டேஷன் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க பகீரத முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதில் முதலாவதாக எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது. அதில் நிச்சயமாக வெற்றி பெறவுள்ளது.

அன்சார் காசீம்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment