கரையோரங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்வு நாடுபூராகவும் ஆரம்பம்.

இன்று நாடெங்கிலும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொள்கைத்திட்டத்திற்கு அமைவாக எமது நாட்டிலுள்ள கடற்கரையோரங்கள் சுத்தப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இவ் வருடமும் செப்டம்பர் மாதம் 15 தொடக்கம் 22 வரை நாடுபூராகவும் நடைபெற்று வருகின்றது.

இதற்கமைவாக இன்று நிந்தவூர் பிரதேச கரையோர பகுதி சுத்தம் பேணல் நிகழ்வின் அங்குராப்பண வைபவம் நிந்தவூர் 4ம், பிரிவு கடற்கரை வீதியிலுள்ள சிறுவர் பூங்காவில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியானி திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான "ஆரிப் சம்சுதீன் அவர்கள் கலந்துகொண்டதோடு நிந்தவூர் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளரும் ஏனைய உத்தியேகத்தர்களும் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர். மேலும் நிகழ்வினை தொடர்ந்து கரையோரங்கள் சுத்தம் செய்யும் பணி ஆரம்பமானது. இதில் பொதுமக்கள், மீனவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்களென பலர் கலந்துகொண்டனர்.

முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment