நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேச விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

வரட்சியினால் பாதிக்கப்பட்டு, தமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேச விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு  நிந்தவூர் அட்டப்பள்ளம் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத் தொகுதியில் இடம் பெற்றது.

நிந்தவூர் பிரதேச அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.சாறூன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி றிபா உம்மா ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ரூபாய். 25 இலட்சம் பெறுமதியான உலருணர்வுப் பொருட்களை வழங்கி வைத்தார்.

இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 1015 குடும்பங்களுக்கு சுமார் ரூபாய் 25 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.திரவியராஜ், கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.றபீக் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர். 





Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment