20 வது திருத்தச் சட்டமூலத்தை நிராகரித்துள்ளது வடமாகாண சபை.


20 வது திருத்தச் சட்டமூலத்தை வடமாகாண சபை நிராகரித்துள்ளதுடன், அதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால் அது தொடர்பில் பரிசீலனை செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்கான 20வது திருத்த சட்டம் கடந்த 04ம் திகதி வட மாகாணசபையில் ஆராயப்பட்ட நிலையில் 7ம் திகதி இறுதித் தீர்மானம் எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. 

இதற்கமைய வடமாகாண சபையின் 105 வது அமர்வு இன்று வியாழக்கிழமை (07) அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், 

தற்போது எம் முன் இருப்பது வரைவு, அது சம்பந்தமாக தன்னால் கருத்துக்கள் கொடுக்கப்பட வேண்டி இருக்கின்றது. இத் திருத்தத்தில் குழப்பங்கள் இருப்பதனால் கருத்துக்களை கூறமுடியாது, ஏதாவது திருத்தம் செய்வதானால் எமக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன் பின்னர் கருத்துக்களை தெரிவிக்கமுடியும் என்றார். 

வடமாகாண சபையின் கடந்த அமர்வில் 20வது திருத்தச் சட்டம் தொடர்பில் விவாதிக்கப்பட்டு கடுமையான எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இத் திருத்தத்தினை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இன்று முடிவெடுக்கப்படுமென அவைத்தலைவர் அறிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்று (07) சபையில் 20வது திருத்தச் சட்டம் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட போது, அதனை நிராகரிப்பதாகவும், அவ்வாறு அதில் திருத்தம் வந்தால், அது தொடர்பில் சபை பரிசீலிக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 

அதனடிப்படையில், வடமாகாண சபை 20வது திருத்தத்தினை நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment