தனது சகோதரனின் வாகனத்தில் மோதி இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்ற ஜனாதிபதி.

தனது சகோதரனின் வாகனத்தில் மோதி இறந்தவர்களின் வீடுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இதன்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்வி முதலான விடயங்களில் உச்சபட்ச உதவிகளை செய்து தருவதாகவும் ஜனாதிபதி வாக்களித்துள்ளார்.

பொலனறுவை மாவட்டத்தின் ஹிங்குராக்கொடை - எதுமல்பிடிய பாதையில் கடந்த 08ஆம் திகதி அதிவேகமாகச் செலுத்தப்பட்ட வாகனமொன்றினால் மோதப்பட்டு இரண்டு பேர் அவ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாண்ட் குரூசர் வாகனம் ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த லால் சிறிசேனவுக்கு சொந்தமானது என்பதும் அவர் மணித்தியாலத்துக்கு 140 கிலோ மீற்றர் வேகத்தில் அதனை ஓட்டிவந்திருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தின் பின்னர் தலைமறைவான லால் சிறிசேன கடந்த 09ஆம் திகதி பொலிஸில் சரணடைந்த நிலையில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment