இலங்கையில் இருந்த சட்டவிரோத குழந்தை பண்ணைகள் தொடர்பில் விசாரனை.


1980ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகள் வௌிநாடுகளுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், போலியான முறையில் தத்துக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த குழந்தைகள், தங்கள் பெற்றோரைக் கண்டுபிடிப்பதற்கு உதவியாக, மரபணு தகவல் திரட்டு ஒன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

நெதர்லாந்தில் வெளியான ஆவணப் படம் ஒன்றின் மூலம் இந்த விடயம் வௌியாகியுள்ளது. 

இதில் கருத்து வௌியிட்டுள்ள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, 1980ம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கையில் சட்டவிரோத குழந்தைகள் பண்ணைகள் இயங்கியமை உண்மைதான் என்று ஒத்துக்கொண்டுள்ளார். 

அத்துடன், குழந்தைகள் களவாடப்பட்டு அல்லது வாங்கப்பட்டு வௌிநாட்டு தம்பதிகளுக்கு தத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக, அந்த ஆவணப்படத்தில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை, இலங்கையில், புதிதாக பிறந்த 20 சிசுக்கள் மற்றும் 22 தாய்மார்கள், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை போன்ற இடமொன்றை, 1987ம் ஆண்டு, பொலிஸார் சுற்றிவளைத்தனர். 

இதனையடுத்து, இலங்கையில் பிறக்கும் குழந்தைகளை வெளிநாடுகளுக்குத் தத்துக் கொடுப்பது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது என ராஜித்த சேனாரத்ன கூறியுள்ளார். 

குறித்த காலப் பகுதியில் மாத்திரம் சுமார் 11,000ற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஐரோப்பிய நாட்டுத் தம்பதியினருக்குக் விற்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அந்தக் குழந்தைகளில் சுமார் 4,000 பேர் நெதர்லாந்தினருக்கும் ஏனைய குழந்தைகள் ஸ்வீடன், டென்மார்க், ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்தவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும், இந்த ஆவணப்படத்தில் பெண்ணொருவர் கருத்து வௌியிடுகையில், தனது குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் இறந்து விட்டதாக, வைத்தியசாலையில் கூறியதாகவும், ஆனால், சிசுவொன்றை வைத்தியர் உயிருடன் எடுத்துச் செல்வதை தனது உறவினர் பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். 

அத்துடன், மற்றுமொருவர் கூறுகையில், தன்னை அணுகிய ஒரு பெண், தனது குழந்தைக்கு அவரை தாயாக நடிக்க சம்மதித்தால் 2000 ரூபா தருவதாக, வைத்தியசாலையில் வைத்து கூறியதாக குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, இந்த விடயம் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, இதனை அரசாங்கம் பாரதூரமான விடயமாக கருதுவதாகவும், இது அவதானிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment