புறாக்களின் தங்குமிடமாய்ப் போன சாய்ந்தமருது வைத்தியசாலையின் அவலம்!

மொஹமட் யூசுப் அமீர்.

மத்தியில் சுகாதார பிரதி அமைச்சர், மாகாணத்தில் சுகாதார அமைச்சர் மற்றும் பார்க்கும் திசையெல்லாம் அதிகாரிகள் என நிறைந்திருக்கும் அம்பாறை மாவட்டத்தின், மிகப்பழமைவாய்ந்த சாய்ந்தமருது வைத்தியசாலையானது கவனிப்பாரற்ற நிலையில் புறாக்களின் தங்குமிடமாய் மாறியுள்ளது கவலையான விடயமாகும்.

பலகோடி ரூபாய்கள் செலவிட்டு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் நிர்மாணித்துக்கொடுக்கப்பட்ட சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை காலத்துக்குக்காலம் பழுதுகள் திருத்தப்பட்டு முறையான வகையில் பராமரிக்கப்படாமையால் குறிப்பாக பெண்கள் விடுதியின் கூரை சீட்டுக்கள் உடைந்து அங்கு புறாக்கள் தங்குமிடமாக மாறியுள்ளது.

நோயாளிகள் தங்குவதற்கு பதிலாக நூற்றுக்கணக்கான புறாக்கள் இங்கு தங்குவதால் அவற்றின் எச்சங்களை சுத்தம் செய்வதில் ஊழியர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்ற அதேவேளை வேண்டாத வாடை நோயாளிகளை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

வைத்தியசாலையை, இன்று தரம் உயர்த்துகிறோம் நாளை தரமுயர்த்துகிறோம் என்று வாக்குறுதிகளை வழங்குகின்ற, அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இங்குள்ள இவ்வாறான அவலங்களையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

வைத்தியர்களின் சில நிமிட தாமதத்துக்கும், அபிவிருத்திவேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவிடும், கோஷம் எழுப்பும் ஆர்வலர்களின் கண்களுக்கு இவ்வாறான அவலங்கள் தென்படாமல் இருப்பது வருந்தத்தக்க விடயமாகும்.
பிராந்தியத்தில் மில்லியன் கணக்கில் செலவிட்டு சுகாதாரத்துறையை அபிவிருத்தி செய்வதாகக்கூறும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சாய்ந்தமருது வைத்தியசாலையில் நிலவும் இவ்வாறான அவலத்தை நிவர்த்திக்க உடன் முன்வரவேண்டும்.

சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்திச்சங்கம் இவ்வாறான குறைகள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களது செயற்பாடுகளை மக்கள் மயப்படுத்தவும் வேண்டும்.

இன்று புறாக்கள் குடியிருக்கின்றன நாளை மாடுகள் குடியிருக்கும் இடமாக சாய்ந்தமருது வைத்தியசாலை மாறக்கூடாது.

சாய்ந்தமருது வைத்தியசாலையை இணைத்து அபிவிருத்தி செய்ய வேண்டும் என கூறுபவர்களும் அடையாளத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் இருப்பதுபோன்றே அபிவிருத்தி செய்யவேண்டும் என கருத்துக்கள் கூறுபவர்களும் இவ்வாறான அவலங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
அரசியல்வாதிகளே! அதிகாரிகளே! அழிந்துகொண்டிருக்கும் சாய்ந்தமருது வைத்தியசாலையின் உட்கட்டுமானத்தை அபிவிருத்தி செய்ய விரைந்து முன்வாருங்கள்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment