மியன்மார் அரசை கண்டித்து சம்மாந்துறையில் இன்று அமைதிப் பேரணி (படங்கள் இணைப்பு)


தகவல் - மருதூர் ஹசன்.

மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு எதிரான அந் நாட்டு அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைகளை கண்டித்து இன்று சம்மாந்துறையில் எதிர்ப்பு அமைதிப் பேரணி நடைபெற்றது.

குறித்த அமைதிப் பேரணியானது இன்று குத்பா தொழுகையின் பின் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் இருந்து சம்மாந்துறை பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் அவர்களிடம் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்க்பட்டது. 

இவ்வார்ப்பாட்ட பேரணிக்கு  மடை திரண்ட வெள்ளம் போல் சம்மாந்துறை மக்கள் திரண்டு மியன்மார் அரசுக்கெதிரான கண்டனங்களைப் பதிவு செய்தனர். Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment