சம்மாந்துறை வைத்தியசாலை ஊழியர்களின் போக்கில் வெறுப்படையும் சம்மாந்துறை மக்கள்.

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.

“ மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்தல் ” 
“ வெந்த புண்ணில் வேல் பாய்தல் ”

போன்ற பலமொழிகளை கேள்விப்பட்டிருப்பீர்கள் இந்தப் பலமொழிகள் மிகவும் பொருந்தக் கூடிய இடம் சம்மாந்துறை வைத்தியசாலைதான். ஆம் தனக்கு ஏற்பட்டுள்ள சிறுகாயம் காரணமாக அல்லது பெருங் காயம் காரணமாக அல்லது ஏதாவது ஒரு உபாதை காரணமாக சம்மாந்துறை வைத்தியசாலைக்குச் சென்றால் அங்கே வைத்தியசாலையும் அதன் ஊழியர்களும் நடந்து கொள்ளும் விதத்தினால் அந்த உபாதை மேலும் முற்றி மன உளைச்சலுக்கும் நோயாளர்கள் ஆளாகிவிடுகின்றார்கள்.

அதிக பணம் உள்ளவன் விரும்பியவாறு அவனது நோய்க்கு கொழும்பு-கண்டி என அலைந்து அரசாங்க வைத்தியசாலையிடமோ அல்லது தனியார் வைத்தியசாலையிடமோ பணத்தைக் கரைத்து வைத்தியம் செய்து கொள்கின்றனர் ஆனால் ஏழைகள் எங்கே செல்வார்கள்...?? அவர்கள் அரச வைத்தியசாலைக்குத்தானே செல்வார்கள் அப்படி சம்மாந்துறை ஏழை எளியவர்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்றால் அங்கே வைத்தியசாலை ஊழியர்கள் நடந்து கொள்ளும் விதத்தை கண்டு பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து வருகின்றனர்.

01. நோயார்களிடம் தகாத வார்த்தைகளைப் பிரயோகித்தல்.
02. தேனீர் குடிப்பதற்கும், கதைத்துக் கொண்டிருப்பதற்கும் தெரிந்தவர்களை மாத்திரம் உபசரித்து அலவலாவுதல்.
03. நோயாளிகள் எடுக்கும் வாந்தியை அவர்களது கையாலேயே அள்ள வைத்தல்.
04. செய்யும் தவறை சுட்டிக்காட்டினால் முறையற்ற சிகிச்சை செய்து மரணபயமுறுத்தல்.
05. நோயாளியை விட செல்போனை அதிகம் கவனித்தல்.
06. உள்ளுர் ஊழியர்கள் கடமை நேரத்தில் குறைவாகவே வைத்தியசாலையில் இருத்தல்.
07. வைத்திசாலையில் ஒரு மாதிரியும் வெளியில் ஒரு மாதிரியும் சிகிச்சை மேற் கொள்ளல்.

போன்ற வைத்திசாலையினதும், வைத்தியசாலை ஊழியர்களினதும் நடத்தைகளைக் கண்டு சம்மாந்துறை மக்கள் ஆத்திரம் அடைந்து வருகின்றனர். இவர்களது இந்த அசமந்தப் போக்கு தொடர்பாக வைத்திசாலை நிர்வாகவும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக சம்மாந்துறை கல்லெரிச்சல் பிரதேசவாசிகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களிடம் பொதுக்கள் அனைவரும் கையொப்பமிட்டு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

இதோ அந்தக் கடிதம்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment